/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கன்னியாகுமரியில் ரூ. 2,490 கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனத்துடன் காசா கிராண்ட் ஒப்பந்தம்
/
கன்னியாகுமரியில் ரூ. 2,490 கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனத்துடன் காசா கிராண்ட் ஒப்பந்தம்
கன்னியாகுமரியில் ரூ. 2,490 கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனத்துடன் காசா கிராண்ட் ஒப்பந்தம்
கன்னியாகுமரியில் ரூ. 2,490 கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனத்துடன் காசா கிராண்ட் ஒப்பந்தம்
ADDED : ஜன 25, 2024 08:44 AM

கன்னியாகுமரியில் சுற்றுலா சார்ந்த திட்டத்தை செயல்படுத்த, 2,490 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக, சிங்கப்பூரை சேர்ந்த 'ஷைன் கோ குளோபல்' நிறுவனத்துடன், காசா கிராண்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காசா கிராண்ட் நிறுவனம் பல்வேறு நகரங்களில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அடுத்த கட்டமாக, தொழிலக மனைகள் மற்றும் வணிக, அலுவலக வளாகங்களை கட்டும் திட்டங்களையும் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதிய முயற்சியாக, தென்னாப்ரிக்கா தலைநகரான கேப் டவுன் மாதிரியில் கன்னியாகுமரியில் சுற்றுலா நகரை உருவாக்க காசா கிராண்ட் நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக, சிங்கப்பூரை சேர்ந்த, 'ஷைன் கோ குளோபல்' என்ற சர்வதேச நிறுவனத்துடன் காசா கிராண்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் சுற்றுலா நகரை ஏற்படுத்த, 2,490 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எம்.ஏ.என்., என்ற பெயரில், புதிய சுற்றுலா நகரம் அமையும் என்று கூறப் படுகிறது.
இங்கு, 40 ஏக்கர் பரப்பளவில், சுற்றுலா நகரில், 1,000 பேர் அமர கூடிய கூட்ட அரங்கம் கட்டப்படும். இத்துடன், 100 கடைகள் மற்றும் தியேட்டர்கள் அடங்கிய வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக, 50 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதிகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து காசா கிராண்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான தலைமை அலுவலர், மன்தீப் சிங் கூறியதாவது:
காசா கிராண்ட் நிறுவனம் பிரீமியம் தரத்திலான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் இத்துறையில் மைல் கல்லாக நிலைக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் சுற்றுலா நகர திட்டத்தால் கன்னியா குமரிக்கு உலக அளவிலான முக்கியத்துவம் கிடைக்கும்.
சுற்றுலா மட்டுமல்லாது வணிகம், கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இத்திட்டம் முன்னோடியாக அமையும். தமிழக பொருளாதார மேம்பாட்டுக்கும் இத்திட்டம் சிறந்த உதாரணமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.