/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
வீட்டுக்குள் துாசு படிவதை தடுக்க உதவும் புதிய வகை ஜாலிகள்!
/
வீட்டுக்குள் துாசு படிவதை தடுக்க உதவும் புதிய வகை ஜாலிகள்!
வீட்டுக்குள் துாசு படிவதை தடுக்க உதவும் புதிய வகை ஜாலிகள்!
வீட்டுக்குள் துாசு படிவதை தடுக்க உதவும் புதிய வகை ஜாலிகள்!
ADDED : ஏப் 12, 2025 07:45 AM
பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்ற நிலையில், அது எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். நாம் பல்வேறு காரணங்களுக்காக சென்ற இடங்களில் பார்த்த வீடுகளின் அழகு, வடிவமைப்பு போன்றவை நம்மை வெகுவாக கவர்ந்து இருக்கும்.
குறிப்பாக, சிலருடைய வீடுகளில் எந்த பொருளும் அதற்கான இடத்தில் மட்டுமே ஒழுங்காக வைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும். நம் வீட்டிலும் இது போன்று பொருட்கள் ஒழுங்கு குறையாமல் உரிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்.
இதே போன்று, வீடுகளில் பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருப்பதுடன், அங்கு துாசு படியாமல் முறையாக பராமரிக்கப்பட்டு இருக்கும். நம் வீட்டிலும் இப்படி துாசு படியாமல் மிக சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்தாலும், எதார்த்தநிலையில் அது நடப்பதில்லை.
பொதுவாக வெளியில் இருந்து தான் வீட்டுக்குள் துாசு வருகிறது என்ற எண்ணம் அனைவரிடமும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, போக்குவரத்து அதிகம் உள்ள சாலையை ஒட்டி அமைந்திருக்கும் வீடுகளில் தான் துாசு அதிகம் ஏற்படுவதாக மக்கள் நினைக்கின்றனர்.
வீட்டுக்குள் புழுதி மற்றும் துாசு ஏற்பட இது ஒரு பிரதான காரணம் என்றாலும், மேல் மாடிகளில் உள்ள வீடுகளிலும் துாசு படிவது எதனால் என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். வாகன போக்குவரத்து காரணமாக சாலையில் ஏற்படும் துாசு வீட்டுக்குள் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சுவரை இடைவெளியின்றி அமைக்கின்றனர்.
சுற்றுச்சுவர் கட்டுமானத்தில் சிமென்ட் ஜாலிகளை பயன்படுத்தினால், வெளியில் உள்ள விஷயங்களை எளிதாக பார்க்கலாம்; காற்றோட்டம் ஏற்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். அதே வெளியில் இருந்து யாராவது வீட்டை இது வழியே எட்டி பார்த்தால் என்ன செய்வது என்றும் மக்கள் யோசிக்கின்றனர்.
இதில் கண்ணாடியில் இருப்பது போன்று,'ஒன்சைடு வியூ' வசதியுடன் சில புதிய வகை சிமென்ட் ஜாலிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஓடுகள் விற்கும் கடைகளில் கேட்டால், இது போன்ற ஒன்சைடு வியூ ஜாலிகள் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த ஜாலிகள் வழியே சாலையில் இருந்து பார்த்தால், வீட்டின் உட்புற பகுதிகள் தெரியாது. ஆனால், வீட்டில் இருந்து பார்த்தால், வெளியில் யார் செல்கின்றனர் என்பதை எளிதாக பார்க்க முடியும், இதனால், வெளியில் புழுதி பறந்தாலும், வீட்டுக்குள் துாசு வராது என்பது இதன் சிறப்பு தன்மையாக குறிப்பிடப்படுகிறது.
சிமென்ட் அடிப்படையில் மட்டுமல்லாது, தற்போது குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், 'டெரகோட்டா' முறையிலும் ஜாலிகளை தயாரித்து வழங்குகின்றன. இவ்வகை ஜாலிகளை வாங்கி பயன்படுத்தினால், சுற்றுச்சுவருக்கு கூடுதல் அழகு கிடைக்கும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.