தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு திட்டம் போட்டு கட்டுங்க வீடு

எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு திட்டம் போட்டு கட்டுங்க வீடு

எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு திட்டம் போட்டு கட்டுங்க வீடு


UPDATED : நவ 13, 2026 04:24 PM

ADDED : நவ 13, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 04:24 PM ADDED : நவ 13, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டின் மின்சார செலவை குறைத்து, எதிர்கால தேவைகளுக்கும் ஏற்றவாறு வீட்டை அமைப்பதும் அவசியம்.

இதற்கு உதவுவது கூரை சூரிய மின்சாரம் எனப்படும் ‘சோலார் ரூப்டாப் சிஸ்டம்’. வீட்டின் கூரையில் சூரிய மின்தகடுகளை பொருத்துவதன் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றலாம்.

தமிழக அரசின் ‘நம் வீடு சோலார் வீடு’ திட்டம் மற்றும் மத்திய அரசின் ‘பி.எம்.சூர்ய கர்’ திட்டம் வாயிலாக, தகுதியுள்ள வீடுகளுக்கு சூரிய மின்சார அமைப்பை நிறுவ மானியம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

வீடு கட்டி முடித்த பிறகு சோலார் அமைப்பை பொருத்துவதைவிட, கட்டுமான நிலையிலேயே அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது எளிதாக இருக்கும். சூரிய மின்தகடுகளுக்கு பொருத்தமான கூரை பகுதியை ஒதுக்கலாம். மின் கம்பிகள் செல்லும் குழாய்களை முன்கூட்டியே அமைக்கலாம்.

இன்வெர்ட்டர் வைப்பதற்கான இடத்தைத் திட்டமிடலாம். கட்டடத்தின் வலிமை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சோலார் அமைப்பை வடிவமைக்கலாம். எதிர்காலத்தில் மின் வாகன சார்ஜிங் வசதியையும் திட்டமிடலாம்.

இதனால், மின் கட்டணத்தில் சேமிப்பு கிடைக்கும். முறையான பராமரிப்புடன் சூரிய மின் தகடுகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது விளக்குகள், நீரேற்று மோட்டார்கள் போன்ற பொது பயன்பாடுகளுக்கும் சோலார் மின்சாரம் உதவலாம்.

சூரிய மின்சாரம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. மின் தேவை அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், வீட்டிலேயே மின்சாரம் உற்பத்தி செய்வது பயனுள்ள முயற்சி. ஒவ்வொரு புதிய வீட்டிலும் உடனடியாக சோலார் மின்தகடுகளை நிறுவ முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் எளிதாக நிறுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம்.

புதிய வீடு கட்டத் திட்டமிடுபவர்கள் சோலார் மின்சார வசதியையும் தங்களது கட்டுமானத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய சிறிய திட்டமிடல், நாளைய மின் செலவை குறைக்கவும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும்.

-– சரவணகுமார்

உறுப்பினர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்

சங்கம்(காட்சியா)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us