தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ சுவர்களில் பதிகற்கள் ஒட்டும் போது பிரச்னைகளை தடுக்கும் வழிமுறைகள்!

 சுவர்களில் பதிகற்கள் ஒட்டும் போது பிரச்னைகளை தடுக்கும் வழிமுறைகள்!

 சுவர்களில் பதிகற்கள் ஒட்டும் போது பிரச்னைகளை தடுக்கும் வழிமுறைகள்!


ADDED : செப் 12, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடு கட்டும் போது அதன் அனைத்து பாகங்களும் மிக சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, புதிய வீட்டின் வடிவமைப்பு, வெளிப்புற தோற்றம் ஆகியவற்றில் கூடுதல் கவனமாக மக்கள் செயல் படுகின்றனர்.

புதிய வீடு கட்டும் போது, அதில் சுவர்களின் வண்ணம், தரை அமைப்பு போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்போது பெரும்பாலான வீடுகளில், தரை அமைப்பதற்கு பதிகற்கள் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத தாகிவிட்டது.

இதற்கு, வீட்டு தரைகளில் எங்கு எத்தகைய பதிகற்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை வீட்டில் அனைத்து அறைகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் பதிகற்கள் அமைக்கப்பட்டு வந்தன.

ஆனால், தற்போது வீடுகளில் அறைகளின் பயன்பாடு அடிப்படையில் அதற்கு ஏற்ற வகை பதிகற்கள் அமைக்கப்படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக, சுவர்களில் பதிகற்கள் அமைப்பது தற்போது பிரபலமான நடைமுறையாக மாறியுள்ளது.

தரையில் அமைக்கும் போது சற்று தடிமன் அதிகமான பதிகற்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், சுவர்களில் பதிகற்களை அமைக்கும் போது எந்த அளவுக்கு எடை குறைந்த பொருட்களை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

இதில் தரையில் அதிக இடைவெளி இன்றி பதிகற்கள் அமைப்பது வழக்கம். அதில் மெல்லிய இடைவெளியை உரிய பேஸ்ட் பயன்படுத்தி ஒட்டுவது நல்லது. பொதுவாக, சுவர்களில் பதிகற்கள் அமைக்கும் போது, சற்று இடைவெளிவிட்டு ஒட்டுவது நல்ல வழிமுறையாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் டிசைன்கள் இன்றி பிளைன் வடிவத்தில் பதிகற்களை தேர்வு செய்யும் போது அதில் சீரான இடைவெளியை ஏற்படுத்தலாம். அந்த இடைவெளியில் சிறப்பு வகை ஜாயின்ட் பேஸ்ட்களை பயன்படுத்தினால் சிறப்பு அலங்கார வடிவமைப்பு கிடைக்கும்.

சுவர்களுக்கான பதிகற்களை தேர்வு செய்யும் போது, எடை குறைந்த, சிறிய அளவிலான பதிகற்களை பன்படுத்துவது நல்லது. குறிப்பாக, வண்ணம் அதிகமான டிசைன்கள் இல்லாத, பதிகற்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

குறிப்பாக, சுவர்களில் பதிகற்களை ஒட்டும் பணியில் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

சுவர்களுக்கான பதிகற்களை தேர்வு செய்யும் போது, எடை குறைந்த, சிறிய அளவிலான பதிகற்களை பன்படுத்துவது நல்லது, குறிப்பாக, வண்ணம் அதிகமான டிசைன்கள் இல்லாத, பதிகற்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us