/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
வீட்டினுள் வெப்பம் குறைக்கும் 'சவுண்ட் இன்சுலேஷன்': விளக்குகிறார் 'காட்சியா' செயற்குழு உறுப்பினர்
/
வீட்டினுள் வெப்பம் குறைக்கும் 'சவுண்ட் இன்சுலேஷன்': விளக்குகிறார் 'காட்சியா' செயற்குழு உறுப்பினர்
வீட்டினுள் வெப்பம் குறைக்கும் 'சவுண்ட் இன்சுலேஷன்': விளக்குகிறார் 'காட்சியா' செயற்குழு உறுப்பினர்
வீட்டினுள் வெப்பம் குறைக்கும் 'சவுண்ட் இன்சுலேஷன்': விளக்குகிறார் 'காட்சியா' செயற்குழு உறுப்பினர்
ADDED : அக் 04, 2024 11:36 PM

கட்டடங்களின் கழிவறைகளில், 'சங்கன் ஸ்லாப்'கள் மற்றும் ஆர்.சி.சி., ஸ்லாப்பின் பள்ளங்களை நிரப்புவதற்கு, என்ன பயன்படுத்தலாம் என்று விளக்குகிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின்(காட்சியா) செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
பொதுவாக சங்கன் ஸ்லாப்புகள் நிரப்புவதற்கு, செங்கல் சுருக்கி முறை உள்ளிட்ட வழிகளில் பொருளை வைத்து நிரப்பலாம். பழைய ஸ்லாப்கள் நிரப்புவதற்கு முன், அந்த ஸ்லாபின் உறுதித் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
செங்கல் சுருக்கி
சங்கன் ஸ்லாப்பின் பரப்பு, சிறியதாக இருப்பின் விலை மலிவானதும், எளிதில் கிடைக்க கூடியதுமான செங்கல் சுருக்கி என்று அழைக்கப்படும், உடைந்த செங்கற்களை சிமென்ட் அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி நிரப்பலாம். இது, மொட்டை மாடியில் தளம் அமைப்பதற்கு பரவலாக பயன்படுகிறது; இதன் எடை சற்று அதிகமாகும்.
வெர்மிகுலேட்(ஹேமலைட்)
சங்கன் ஸ்லாப்களை நிரப்புவதற்கு, சிறந்த பொருள் என்று கருதப்படுவது ஹேமலைட் என்று அழைக்கப்படும், 'வெர்மிகுலேட்' ஆகும். இதை சிமென்ட் உடன் கலந்து, பள்ளங்களில் நிரப்பி விட்டால், இதன் எடை குறைவாக இருக்கும். ஹேமலைட் எடை குறைவாக இருப்பதால், இதை கட்டடத்தின் மேல் ஏற்றுவதும், கலவை தயார் செய்வதும் மிகவும் எளிது.
இது பாறையில் இருந்து கிடைக்கும், ஒரு வகை கனிமத்தை வெட்டி எடுத்து நெருப்பில் பொரித்து தயாரிக்கப்படும் பொருளாகும். இதன் எடை மிகவும் குறைவாக, 700 முதல் 1,050 கிலோ/எம்3 இருக்கும்.
இது விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இதை, வீட்டு மொட்டை மாடியில் பயன்படுத்தினால் வீட்டினுள் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. இது ஒரு சிறந்த 'சவுண்ட் இன்சுலேஷன்' எனலாம்.
ஏ.ஏ.சி., பிளாக்ஸ்
தற்போது, பரவலாக 'சங்கன் ஸ்லாப்'களை நிரப்புவதற்கு மேலும் ஆர்.சி.சி., ஸ்லாப்பில் உள்ள பள்ளங்களை நிரப்புவதற்கும், இந்த 'லைட் வெயிட்' மெட்டீரியல் பயன்படுத்தப்படுகிறது. உடைந்த ஏ.ஏ.சி., கற்களுடன், சிமென்ட் கலவையை பயன்படுத்தி, நிரப்பிக் கொள்ளலாம்.
அல்லது தேவையான அளவுகளில், முழு ஏ.ஏ.சி., கற்களை பயன்படுத்தியும் பள்ளங்களை நிரப்பிக் கொள்ளலாம். இதன் எடை, 550 முதல், 850 கிலோ/எம்3. பொதுவாக சங்கன் ஸ்லாப்புகளை நிரப்புவதற்கு முன், நன்றாக 'வாட்டர் புரூப்பிங்' செய்து கொள்ள வேண்டும்.
'லைட் வெயிட் கான்கிரீட்'
நிரப்பும் பரப்பளவு அதிகமாக இருப்பின், இப்பொழுதெல்லாம் லைட் வெயிட் கான்கிரீட்மற்றும் போம் கான்கிரீட் போன்ற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். போம் கான்கிரீட்டை பொறுத்தவரை அதன் அடர்த்தி, 500 முதல் 800 கிலோ/எம்3 வரை கூட தயாரித்துக் கொடுக்கிறார்கள்.
இதை பம்ப்கள் மூலம், மேலே ஏற்றி தேவையான இடங்களில் நிரப்பிக் கொள்ளலாம். இதில் உள்ள சிரமம் என்னவென்றால், குறைந்த அளவில் கிடைப்பது என்பது அரிது. எனவே சிறிய வேலைகளுக்கு ஏற்றதல்ல.
இதன் அளவுகளையும் துல்லியமாக எடுத்து, ஆர்டர் செய்தால் மட்டுமே அது நமக்கு கிடைக்கும். பழைய அல்லது புதிய கட்டடங்களில், இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு முன் தக்க பொறியாளரின் ஆலோசனை பெற்று, செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார்.