/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
சூழலை பாதுகாக்கும் கட்டுமான விதிமுறை இதுதான்! சொந்த வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தி மகிழலாம்
/
சூழலை பாதுகாக்கும் கட்டுமான விதிமுறை இதுதான்! சொந்த வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தி மகிழலாம்
சூழலை பாதுகாக்கும் கட்டுமான விதிமுறை இதுதான்! சொந்த வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தி மகிழலாம்
சூழலை பாதுகாக்கும் கட்டுமான விதிமுறை இதுதான்! சொந்த வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தி மகிழலாம்
ADDED : நவ 29, 2025 12:05 AM

பசுமை கட்டுமானம் என்பது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது, ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு மாற்றாக மரங்களை பயன்படுத்தலாம். இதனால், மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்து, இயற்கை வழியில் செலவை குறைக்க முடியும்.
இயற்கை வழியில் கிடைக்கும் காற்று, வெளிச்சம் போன்றவை பரவலாக கட்டடத்தில் நுழையும் வண்ணம் கட்டமைத்தால், மின் சிக்கனத்துடன், அதற்கான செலவும் குறையும்.
வடிவமைப்பு வாயிலாக, கட்டுமான முறை வாயிலாக, கட்டுமானத்தை பராமரிப்பதன் வாயிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளை தவிர்க்க முடியும். இயற்கையான வெளிச்சம், காற்றை பயன்படுத்தும் வண்ணம் வடிவமைப்பதன் வாயிலாக இயற்கை கட்டுமானத்தை ஏற்படுத்த முடியும்.
இயற்கை கட்டுமான விதிமுறைகளின்படி, மழைநீரை சேகரித்துவைத்து கட்டுமானத்துக்கு பயன்படுத்தலாம். வீட்டில் பயன்படுத்திய நீரை தகுந்த முறையில் சுத்திகரித்து பயன்படுத்தலாம். புவி ஈர்ப்பு விசை வாயிலாக, நீரை ஓடச்செய்தும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
தண்ணீரை தேக்கி வைப்பதன் வாயிலாக இதமான வெப்பநிலையை ஏற்படுத்தலாம். ஈரப்பதமான இடத்தில் பட்டுசெல்லும் வெளிச்சம், காற்று ஆகியன வீட்டில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.
வெளிச்சம் பரவலாக உள்ளே நுழையும்போது, மின் பயன்பாட்டை குறைக்க முடியும். சூரிய ஆற்றல், காற்றோட்டம் வாயிலாக மின்சாரம் தயாரித்து பயன்படுத்தலாம்.
இடத்தின் அளவு, கிழக்கு மேற்கை விட, தெற்கு வடக்கு அதிகபடியாக இருப்பதன் வாயிலாக, கட்டடத்தில் சூரிய வெப்பத்தின் தாக்குதலை குறைக்கலாம்.
வெளியில் இருந்து காற்று, உள்ளே தடையின்றி வந்து செல்லும் வகையில் கட்டுமானம் இருக்க வேண்டும். கட்டுமானத்தை சுற்றியுள்ள இடங்களில் மரங்கள், செடி, கொடிகள் வளர்ப்பது நன்மை பயக்கும்.
'பிரமிடு'கள் போன்ற கட்டுமானங்களால், வான்காந்த ஆற்றலை பயன்படுத்தி, கட்டுமானத்தை சக்தி மிக்கதாக மாற்றலாம்.
இந்த பசுமை கட்டுமான விதிகளை பின்பற்றினால், இந்த பூமியை எதிர்கால சந்ததியினருக்கு சூழல் பாதிப்பு இல்லாமல் அப்படியே விட்டுச்செல்ல முடியும் என்பதுதான், பொறியாளர்கள் பலரின் ஒட்டுமொத்த கருத்து.

