sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

கட்டடத்தின் தரை பரப்பில் அனுமதிக்கப்படும் கூடுதல் வசதிகள் என்ன?

/

கட்டடத்தின் தரை பரப்பில் அனுமதிக்கப்படும் கூடுதல் வசதிகள் என்ன?

கட்டடத்தின் தரை பரப்பில் அனுமதிக்கப்படும் கூடுதல் வசதிகள் என்ன?

கட்டடத்தின் தரை பரப்பில் அனுமதிக்கப்படும் கூடுதல் வசதிகள் என்ன?


ADDED : பிப் 03, 2024 09:42 AM

Google News

ADDED : பிப் 03, 2024 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலம் வாங்கி வீடு கட்டுவதானாலும் சரி, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்குவதானாலும் சரி சில அடிப்படை வழிமுறைகளை அறிந்து இருப்பது அவசியம்.

குறிப்பாக, கட்டடத்தில், வரைபடத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வரைபடத்தில் இல்லாத சில பகுதிகள் கட்டப்பட்டு இருப்பதை கவனிக்கலாம்.

இதில் கட்டட வரைபடத்தில் எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டுக்கு அப்பார்ப்பட்ட சில பகுதிகள் குறிப்பிடப்படுவது இல்லை. ஒரு வீட்டைக் கட்டும் போது அல்லது ஒரு டெவலப்பர் கட்டிடம் கட்டும் போது நீங்கள் எவ்வளவு பகுதியைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியாது.

சட்ட விதிகளின்படி, சில பகுதிகள் இவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன. இவை தளபரப்பு குறியீட்டு கணக்கீட்டில் விலக்கு அளிக்கப்பட்டவை. ஒரு கட்டடத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த பரப்பளவில், 20 சதவீத அளவுக்கு சில பகுதிகள் கட்டப்படுகின்றன. கட்டடத்தின் பயன்பாட்டுக்கு தேவை என்ற அடிப்படையில் இவை அனுமதிக்கப்படுகின்றன.

குறிப்பாக, அடித்தள பகுதி, மின் அறை, காவலர் அறை, மோட்டார் அறை, மாடிப்படி அறை போன்றவை எப்.எஸ்.ஐ., விதிகளுக்கு அப்பார்ப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக, இவற்றின் பெயரில் பெரிய அறைகள் கட்டி பயன்படுத்த முடியாது.

அடித்தள பகுதியை பொறுத்தவரை அது பெரும்பாலும் வாகன நிறுத்துமிடமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு காலனியிலோ அல்லது நீங்கள் கட்டற்ற வீடுகளை வைத்திருக்கும் ஒரு பகுதியிலோ வசிக்கிறீர்கள் என்றால், அனுமதிக்கப்பட்ட தரைப் பரப்பளவு விகிதத்தை அதிகரிப்பது உங்கள் சொத்தின் மதிப்பை அதிகரிக்கும், அதே போன்று, மின்சார அறை, காவலர் அறை, மோட்டார் அறை ஆகியவை என்ன அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது.

பார்க்கிங் பகுதிகள், பொழுதுபோக்கு வசதிகள், லிஃப்ட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுவான விளையாட்டுப் பகுதி போன்ற பொதுவான நன்மைகளை அதிகமான குடியிருப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இத்தகைய வரையறைகளுக்கு உட்பட்டு தான் இது போன்ற பயன்பாட்டு அறைகள் இருக்க வேண்டும். பெரிய கட்டடங்களில் தான் இது போன்ற வசதிகள் அனுமதிக்கப்படும் என்று நினைக்காதீர்கள். தனி வீடு கட்டும் நிலையிலும் இது போன்ற கூடுதல் பகுதிகள் அனுமதிக்கப்படும்.

இந்த வசதியை முறையாக பயன்படுத்துவது அவசியம். இதை தவறாக பயன்படுத்தினால் அது விதிமீறல் புகாராக பதிவு செய்யப்பட்டு கட்டடத்துக்கு சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே புதிய வீடு வாங்குவோர், கட்டுனர், விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் கூடுதல் வசதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

கவனிக்க

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு, அது ஒரு மாடிக் கட்டுமானமாக இருந்தாலும் அல்லது பல மாடிக் கட்டடமாக இருந்தாலும், எவ்வளவு கட்டப்பட்ட பகுதி உள்ளது என்பதை நகரத்தின் திட்டமிடல் ஆணையம் தீர்மானிக்கிறது.
அனைத்து நகரங்களிலும் தரைப் பரப்பளவைத் தீர்மானிப்பது அதிகாரிகள்தான் என்பதால், சொத்தில் முதலீடு செய்வதற்கு முன், நகரத்தின் மாவட்டத்தின் சட்டங்களை கவனமாகப் படிக்கவும், குறிப்பாக நீங்கள் பல மாடி கட்டடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போது. இது உங்கள் சொத்தின் இறுதி விலையை கணக்கிட உதவும்.








      Dinamalar
      Follow us