/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு கட்ட ஏ.ஏ.சி., பிளாக் பயன்படுத்த தயங்காதீர்
/
வீடு கட்ட ஏ.ஏ.சி., பிளாக் பயன்படுத்த தயங்காதீர்
ADDED : மே 04, 2024 12:24 AM

நாம் வீடு கட்டப்போகும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை நிலைத்து நிற்க செய்யும் வகையிலான மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து, நாம் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, ஹாலோ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள், ஏ.ஏ.சி., கற்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை புறக்கணிக்காதீர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு தகவல்கள் எளிதாக கிடைக்கும்.
ஆனாலும் ஏ.ஏ.சி., கற்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
கட்டுமான பணியில் மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில், சில இன்ஜினியர்களும் கூட, ஏ.ஏ.சி., கற்களை பயன்படுத்தினால் செலவு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
ஒரு 9 அங்குல ஏ.ஏ.சி.,பிளாக்கை பயன்படுத்தும் இடம் என்பது, 13 செங்கல்களுக்கு இணையானது. தற்போது ஒரு செங்கலின் விலை என்ன, 13 செங்கல்களை வரிசையாக வைத்து இணைக்க தேவைப்படும் சிமென்ட் கலவை செலவை கருத்தில் கொள்ள வேண்டும். ஏ.ஏ.சி., கற்கள் இப்போது தான் வந்துள்ளது, இதை பயன்படுத்தி கட்டடம் கட்டினால் அதன் உறுதி நன்றாக இருக்கும்.
ஏ.ஏ.சி., கற்களை தயாரிக்கும் நிலையில், அது பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கல்லின் மொத்த எடை என்ன, அது எவ்வளவு சுமையை தாங்கும் என்பது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உயரமான கட்டடங்கள் கட்டும் போது, எடை குறைந்த கற்களை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
அதற்கு ஏ.ஏ.சி., கற்கள் சிறந்த மாற்றாக அமைந்துள்ளன என்பதில், மாற்றுக் கருத்து இல்லை என்கின்றனர் இன்ஜினியர்கள்.