/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
மனிதர்களின் சூழல் பிரச்னைக்கு இயற்கை கட்டுமானமே தீர்வு
/
மனிதர்களின் சூழல் பிரச்னைக்கு இயற்கை கட்டுமானமே தீர்வு
மனிதர்களின் சூழல் பிரச்னைக்கு இயற்கை கட்டுமானமே தீர்வு
மனிதர்களின் சூழல் பிரச்னைக்கு இயற்கை கட்டுமானமே தீர்வு
ADDED : மார் 30, 2024 12:50 AM

இயற்கை கட்டுமானம் நமக்கும், பறவைகள், பூச்சிகள், மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இது குறித்து, கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர்கள் சங்கம் (காட்சியா) உறுப்பினர் மற்றும் இன்ஜினியர் விஸ்வநாதன் கூறியதாவது:
இயற்கை கட்டடக்கலை என்பது, குறிப்பிட்ட வகையான இடங்களை வெளிப்புறத்தில் உருவாக்கும் பணியாகும். விளையாட்டு மையம் அமைப்பதாகவோ, ஒரு குளத்தை வடிவமைப்பதாகவோ இருக்கலாம்.
ஒரு பூங்காவை உருவாக்குவது போன்றது. அதாவது, இயற்கையில் உள்ள தோற்றத்தை நம் முயற்சியில் செயற்கையாக உருவாக்குவது.
இது கட்டடங்கள் நில அமைப்பு நீர், தாவர வகைகள் போன்றவற்றுக்கு இடையே ஆன தொடர்புகளை வடிவமைக்கும் கலை ஆகும். பொது சதுக்கங்கள், ஊடு பாதைகள், பூங்காக்கள், நெடுஞ்சாலை ஓரங்கள் வடிவமைப்பு, கட்டடங்களை சுற்றிய நிலப்பரப்புகளை வடிவமைத்தல், ஆகியவை ஆகும்.
இயற்கை கட்டுமானம் செய்வதினால் வீடுகளில் அலுவலகங்களில் வணிக வளாகங்களில் மழைநீர் வடிகால் நம்மால் உருவாக்க முடிகிறது. இதனால்நீர் மேலாண்மை மேம்படுகிறது.
நெடுஞ்சாலை ஓரங்களிலும், சிறு செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்பதினால் ஒளி மற்றும் ஒலி இவைகளை கிரஹித்துகொண்டு, வாகன விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
வீடுகளில், அலுவலகங்களில், வணிக வளாகங்களில் இயற்கையான குளிர்ந்த காற்றோட்டத்தையும், கண்களுக்கு குளிர்ச்சியையும், மன அமைதியையும் ஏற்படுத்துகிறது.
நமது வாழ்வில் இயற்கை கட்டடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழல் வெப்பமடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
தற்போது வீடுகளில் மாடியிலும், முற்றத்திலும் சிறிய செடிகளையும், மரங்களையும், செங்குத்தாக வளர்க்கின்றனர் இதனால் நம் ஆரோக்கியம் தெளிவாகிறது.
நாம் செய்யும் இயற்கை கட்டுமானம் நமக்கும், பறவைகள், பூச்சிகள், மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும், வாழ்வாதாரமாக இருக்கிறது. இத்தகைய இயற்கை கட்டடக்கலையை மேற்கொள்வதன் வாயிலாக, மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

