/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
எதிர்காலத்துக்கு சேமிப்பு தரும் வளமான பசுமை கட்டடங்கள்
/
எதிர்காலத்துக்கு சேமிப்பு தரும் வளமான பசுமை கட்டடங்கள்
எதிர்காலத்துக்கு சேமிப்பு தரும் வளமான பசுமை கட்டடங்கள்
எதிர்காலத்துக்கு சேமிப்பு தரும் வளமான பசுமை கட்டடங்கள்
ADDED : ஆக 03, 2024 06:53 AM

சமீப காலமாக, பசுமைக் கட்டடங்கள் அதிகரித்து வருவது, வரவேற்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இயற்கையான பொருட்களை கொண்டும், புதுப்பித்தக்க ஆற்றல் வளங்களை கொண்டும் கட்டப்படும் கட்டடங்கள் தான் பசுமைக் கட்டடங்கள்.
உலகம் முழுவதும் பரவலாகி வரும் பசுமைக் கட்டடங்கள், இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இவை, நம் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வீட்டை சுற்றி, செடி, கொடிகளால் படர்ந்திருக்கும் பசுமைப் போர்வை ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அதிகளவில் வித்திடும்.
சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு, மாசு மற்றும் கழிவுகளை குறைக்கும் நடவடிக்கை மற்றும் மறு சுழற்சி போன்றவற்றை உறுதி செய்வது, இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வருவது, மழை நீர் சேகரிப்பு மற்றும் பிற வளங்களை வீணாக்காமல் இருத்தல், இயற்கை வெளிச்சம், நல்ல காற்றோட்டம் வருவதற்கான வசதிகள் போன்றவை, இன்றைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கு சிறப்பானதொரு வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.
பசுமைக் கட்டட முயற்சிகள் வாயிலாக, மின்சார பயன்பாட்டையும், தண்ணீரையும் நிறைய மிச்சப்படுத்த முடியும்.
ஒரு கட்டடம், அதில் வசிக்கும் மனிதர்களுக்கு முழுவதுமாக ஏற்றதாக இருக்க வேண்டும். பசுமைக் கட்டடங்களின் தேவை அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் பசுமை கட்டுமானப் பொருட்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.