/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பீம்கள் இல்லாமல் கட்டடம் கட்டலாமா? பொறியாளர்கள் தெளிவான விளக்கம்
/
பீம்கள் இல்லாமல் கட்டடம் கட்டலாமா? பொறியாளர்கள் தெளிவான விளக்கம்
பீம்கள் இல்லாமல் கட்டடம் கட்டலாமா? பொறியாளர்கள் தெளிவான விளக்கம்
பீம்கள் இல்லாமல் கட்டடம் கட்டலாமா? பொறியாளர்கள் தெளிவான விளக்கம்
ADDED : அக் 17, 2025 11:27 PM

நாங்கள் புதியதாக கட்டவுள்ள வீட்டுக்கு: -சசிகுமார்: புதிதாக கட்ட உள்ள, வீட்டின் அமைப்புகளை கொண்டு கட்டட பொருட்களை அளந்து, அதற்கு உண்டான யூனிட் ரேட்டில் மதிப்பீடு செய்து கட்டுவது, பொருத்தமாக இருக்கும். மாற்றங்கள் செய்தால் கூடுதல் செலவை குறைக்கவும் முடியும். பொறியாளர்களின் அணுகுமுறையோடு மாற்று கட்டுமான பொருட்களை உபயோகிக்கும் வழிமுறைகளை கண்டு, கட்டடத்தின் வலிமை குறையாமல், விலை குறைவான கட்டுமானத்தையும் மேற்கொள்ளலாம்.
நாங்கள் கட்டி வரும் வீட்டின் அருகே: -தம்புராஜ்: பண்டைய காலம் முதலே, தமிழர்கள் கட்டட கலையில் சிறந்து விளங்கி பல கோயில்களை கட்டி உள்ளார்கள். குறிப்பாக, கோயில்களில் கருங்கல் துாண்கள் கருங்கல்லில் ஆன பீம்கள் மற்றும் கருங்கல்லில் ஆன ஸ்லாப்புகள் போன்ற இன்றைய நவீன, 'பிரைவேட் ஸ்ட்ரக்ச்சர்' தொழில்நுட்பத்தை, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் கட்டி, இன்றும் அவை நீடித்து நிற்கின்றன. துாண்கள் மற்றும் பீம்கள், ரூப் ஸ்லாப் உள்ளடக்கிய கட்டுமானங்களே மிகச்சிறந்த வலிமையான கட்டடங்களாக விளங்கும். பீம்கள் இல்லாத கட்டடங்கள் வலிமையான நில அதிர்வுகளை தாங்காது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள்: -தருண்குமார்: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், கட்டடத்துறையில் பல புதிய பொருட்கள் வந்து கொண்டுள்ளது உண்மையே. தரமான, விலை குறைந்த மாற்றுப் பொருட்கள் மற்றும் கட்டுமான அமைப்புகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக, சுவர்களில் மாற்று கட்டுமான பொருட்களாக பிளைஆஷ் பிரிக்ஸ், அடர்த்தி ஊட்டப்பட்ட பிளாக்ஸ்(ஏ.ஏ.சி., பிளாக்), பப் பேனல் போன்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டும்போது வலிமையானதாகவும், கட்டுமான செலவு மிக குறைந்தும், நல்ல ஒரு சேமிப்பும் கிடைக்கும்.
நாங்கள் கட்டி வரும் வீட்டின்: -தமிழ்ச்செல்வி: படிக்கட்டுகளின் உயரம் மற்றும் அகலம், சரியான விதத்தில் அமைக்கவில்லை என்றால் மூட்டு வலி மற்றும் படி ஏறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே, படிக்கட்டின் உயரம், 150 முதல் 170 செ.மீ.,க்குள் இருக்க வேண்டும். அகலம் 300 செ.மீ.,க்கு குறையாமல் இருப்பது நல்லது.
நாங்கள் கட்டி வரும் வீட்டின்: -சம்பத்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று சிமென்ட் தரம் மற்றும் வலிமையான கான்கிரீட்டுகளை பொறுத்து, சென்ட்ரிங் பிரிப்பதில் காலங்கள் வேறுபடும். பீம்களில் உள்ள சென்ட்ரிங்குகளை, 21 நாட்கள் கழித்து பிரிப்பது சரியானதாக இருக்கும்.
3 மீட்டருக்கு குறைவான ரூப் ஸ்லாப்புகளை ஏழு நாட்களுக்கு பிறகும், நான்கு மீட்டருக்கு குறைவாக உள்ள ஸ்லாப்புகளை, 14 நாட்களுக்கு பிறகும், ஐந்து மீட்டருக்கு மேல் உள்ள ஸ்லாப்புகளை, 21 நாட்களுக்கு பின்னரும் பிரிப்பது சிறந்தது. கான்கிரீட்டின் தரத்தை பொறுத்தும் இந்த கால அளவுகள் வேறுபடும்.
நாங்கள் புதிதாக கட்டடம் கட்ட உள்ளோம். எங்கள் பொறியாளர் கட்டடப் பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் தண்ணீரின் தன்மையை பரிசோதித்து: -வசந்தகுமார்: தகுந்த பொறியாளரின் ஆலோசனைப்படி கட்டடம் கட்ட உள்ளீர்கள். அதுவே முதல் தரமான பணி. தங்களின் பொறியாளர் கூறியபடி, மண்ணின் தன்மையும் நிலத்தடி நீரின் தன்மையையும் சிறந்த ஆய்வகத்தில் பரிசோதித்து, கட்டடத்திற்கு உபயோகிப்பது சிறந்தது.
-விஜயகுமார்: முன்னாள் தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).: