sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

கட்டுமானத்துக்கு உப்பு தண்ணீர் பயன்படுத்தலாமா? விளக்கம் அளிக்கிறார் பி.ஏ.ஐ., கோவை தலைவர்

/

கட்டுமானத்துக்கு உப்பு தண்ணீர் பயன்படுத்தலாமா? விளக்கம் அளிக்கிறார் பி.ஏ.ஐ., கோவை தலைவர்

கட்டுமானத்துக்கு உப்பு தண்ணீர் பயன்படுத்தலாமா? விளக்கம் அளிக்கிறார் பி.ஏ.ஐ., கோவை தலைவர்

கட்டுமானத்துக்கு உப்பு தண்ணீர் பயன்படுத்தலாமா? விளக்கம் அளிக்கிறார் பி.ஏ.ஐ., கோவை தலைவர்


ADDED : அக் 11, 2024 11:38 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்போது நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில், தரைதளத்தின் மேற்கூரை பூச்சு விழுந்துவிட்டது. எதனால் ஏற்பட்டது? எப்படி சரி செய்ய வேண்டும்?

-கே. சகாதேவன், ஒண்டிப்புதுார்.

கட்டடத்தின் மேற்கூரையின் சிமென்ட் கலவை பூச்சின் கனம் 30 மி.மீ., இருக்க வேண்டும். பூசிய பின்பு காற்று வெற்றிடங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக, உங்கள் கட்டடத்தில் சிமென்ட் கலவை பூச்சு கீழே விழுந்து இருக்கலாம். சிமென்ட் பூச்சின் கனம் குறைவாகவும், அதிகமாகவும் இருந்திருக்கலாம்.

பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன், 'ஹேக்கிங்' செய்திருக்க வேண்டும். இந்த முறையில் கொத்திவிடும் போது மேற்கூரைக்கு பூசப்படும் கலவை, நன்றாக ஒட்டும். இல்லையேல் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை சரி செய்வது மிகவும் கடினம். ஆகவே, பூசிய அனைத்தையும் எடுத்துவிட்டு நன்றாக ேஹக்கிங் செய்துவிட்டு, மீண்டும் பூச வேண்டும்.

கட்டடத்துக்கு பயன்படுத்தப்படும் நீரில், நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

-எஸ். மலர்விழி, போத்தனுார்.

அனைவரும் தரமான கட்டுமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கட்டுமானத்துக்கு முக்கிய பங்காக இருக்கும் தண்ணீரின் தரத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

கட்டடத்திற்கு தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு கலந்துள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல மெல்ல அரிமானத்துக்கு உட்பட நேரிடும். எனவே, குடிநீரில் வீடு கட்ட வேண்டுமோ என்ற சந்தேகமும் எழக்கூடும். அதிகம் உப்பு கலக்காத தண்ணீராக இருப்பது அவசியம்.

அதாவது, தண்ணீரின் 'பிஎச்' அளவு, 6.5-8.5 வரை இருக்க வேண்டும். தண்ணீரில் குளோரைடு மற்றும் சல்பேட் போன்ற உப்பு சத்துக்கள் அதிகமாக இருந்து, அவற்றை கான்கிரீட்டில் நாம் பயன்படுத்தும்போது, கட்டடத்தின் வலிமை குறையும்.

அதுமட்டுமின்றி, இரும்பில் அரிமானம் ஏற்படுத்தும். கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை, அருகே உள்ள பரிசோதனை மையங்களில், கட்டுமானத்துக்கு பயன்படுத்தலாமா என்பதை உறுதிசெய்த பின்பு பயன்படுத்தலாம்.

சிமென்ட் மூட்டையில் 'பி.பி.சி., 53' கிரேடு என்று அச்சிடப்பட்டுள்ளது எதனை குறிக்கிறது?

-எஸ்.ஜெகதீஸ்வரன், காளப்பட்டி.

'பி.பி.சி., 53' கிரேடு என்ற வகைப்பாடு, அதன் தாங்கும் திறனை குறிக்கிறது. இதில், எரி சாம்பல் போன்றவை கலந்து, கான்கிரீட்டின் நீடிப்பு மற்றும் துருப்பிடிப்பு தடுப்பு குணங்களை அதிகரிக்கின்றன.

53 ரக சிமென்ட், 28 நாட்களில், 53 எம்.பி.ஏ., அளவிற்கு வலிமை பெறும். உயர்ந்த கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு, பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாற்றுகிறது. இது நீர் நுழைவைதடுக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.

அதனால், சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வகை சிமென்ட் அதிக கட்டட பணிகளிலும், நீண்டகால பயன்பாடுகளிலும் தரமான, வலிமையான கட்டுமானத்தைஅளிக்கிறது.

கட்டடத்தில் கான்கிரீட் போடும் முன், 'கவர்' என்று வைக்கிறார்கள். அதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்; எதற்காக வைக்கிறார்கள்?

-ஜி.கதிரவன், பீளமேடு.

கட்டடங்களில் கான்கிரீட் கவரின் முக்கிய பங்கு என்பது அதன் நிலைத்தன்மை, வலிமை, நீண்டகால பயன்பாட்டை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இது கான்கிரீட்டின் வெளிப்புறத்திற்கும் மற்றும் கம்பிகளுக்கும் இடையிலான துாரத்தை குறிக்கிறது.

கவரின் அளவு கட்டட பணியின் வகைக்கு ஏற்ப மாறும். பொதுவாக இந்த அளவு, 'ஐஎஸ் 456:2000' முறைப்படி வழங்கப்படுகிறது. துாண்களில் 40 மி.மீ., கவர், படிக்கட்டு மற்றும் பீம்களுக்கு, 25 மி.மீ., கவர், அஸ்திவாரத்திற்கு, 50 மி.மீ., கவர் என அளவு மாறுபடும்.

கவரை சரியான முறையில் அமைப்பது, கட்டடத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு முக்கியம். கவரின் முக்கிய பங்கு, உள்ளே வைக்கப்பட்டுள்ள கம்பிகளை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாப்பதுதான்.

-பொறியாளர் லக்ஷ்மணன்,

தலைவர், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை கிளை.






      Dinamalar
      Follow us