தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/கடன் தகுதி புள்ளிகள் குறைவதால் ஏற்படும் சிக்கல்கள்!

கடன் தகுதி புள்ளிகள் குறைவதால் ஏற்படும் சிக்கல்கள்!

கடன் தகுதி புள்ளிகள் குறைவதால் ஏற்படும் சிக்கல்கள்!


ADDED : பிப் 17, 2024 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 08:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முந்தைய காலங்களில் மக்கள் வீடு, வாகனம் வாங்குவது, தொழில் மேம்பாடு போன்றவற்றுக்காக கடன் கேட்டு வங்கிகளை நேரடியாக அணுகுவது வழக்கம். இவ்வாறு அணுகுவோரின் சொத்து நிலை, கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு அவரிடம் உள்ள வருவாய் குறித்த விபரங்களை வங்கிகள் ஆராயும்.

இதில் ஈடாக காட்ட அதிக மதிப்புடன் சொத்துக்கள் இருந்தால் அதை பார்த்து சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்குவது குறித்து வங்கிகள் முடிவு செய்யும். கடன் தவணையை முறையா செலுத்தும் வகையில் உரிய அளவுக்கு வருவாய் இருந்தால் அவருக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வரும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக யார் கடன் கேட்டு வங்கிகளை அணுகினாலும், அவர்களின் பான் எண்ணை பயன்படுத்தி வங்கிகள் கடன் தகுதி புள்ளிகள் நிலை குறித்து ஆராய்கிறது. கடன் தகவல் நிறுவனமான, கிரடிட் இன்பர்மேஷன் பீரோ ஆப் இந்தியா என்ற, சிபில் புள்ளிகள் குறித்து வங்கிகள் ஆராய்கின்றன.

இன்றைய சூழலில், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் வங்கிகளிடம் கடன் வாங்கும் நிலையில் உள்ளனர். இதனால், அனைத்து வங்கிகளும், விண்ணப்பதாரரின் கடன் தகுதி புள்ளிகளை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இதில் ஒவ்வொருவரின் தகுதியும் பல்வேறு நிலைகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒருவரின் செல்வ நிலை மட்டுமல்லாது, அவரது திருப்பி செலுத்தும் பழக்கம் எப்படிப்பட்டது என்பதன் அடிப்படையில் தான் இந்த புள்ளிகள் வரையறுக்கப்படுகின்றன.

இதில் வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிப்போரின் தகுதியை முடிவு செய்ய அனைத்து வங்கிகளும் இந்த புள்ளிகளை பயன்படுத்த துவங்கி உள்ளன. இதனால் சிக்கல் இன்றி கடன்களை முறையாக செலுத்தி வரும் நபர்களுக்கு வருவாய் குறைவாக இருந்தாலும் வீட்டுக்கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதே சமயம், புள்ளிகள் குறைந்தவர்களுக்கு வீட்டுக்கடன் மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, கிரடிட் கார்ட், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தாவிட்டாலும் கடன் தகுதி புள்ளிகள் குறைகின்றன.

கிரடிட் கார்ட், தொலைபேசி கட்டணம் கட்டுவதில் வாடிக்கையாளரால் மட்டுமே பிரச்னை ஏற்படும் என்று மதிப்பிடுவது தவறு. சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனத்தின் குளறுபடியால் கூட கட்டணம் வசூலாவதில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம்.

இது போன்ற சிறிய காரணங்களால் ஏற்படும் கடன் தகுதி புள்ளிகள் சரிவு, வீட்டுக்கடன் போன்ற விஷயங்களில் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட வாய்பாக அமைகிறது. எனவே, வீட்டுக்கடனுக்கான செல்வோர், தங்கள் கடன் தகுதி உள்ளிகளை சீராக பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us