/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வெளிப்புற சூழலையும் உள்ளக சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் கட்டுமானம்
/
வெளிப்புற சூழலையும் உள்ளக சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் கட்டுமானம்
வெளிப்புற சூழலையும் உள்ளக சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் கட்டுமானம்
வெளிப்புற சூழலையும் உள்ளக சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் கட்டுமானம்
ADDED : டிச 06, 2025 06:30 AM

மி ன்சாரம், நீர், இயற்கை வளங்கள் குறைந்து வரும் இந்நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், வளங்களை சேமித்து கட்டப்படும் கட்டடங்களின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்காலகட்டத்தில் இயற்கை வழி கட்டடங்கள் கை கொடுக்கின்றன.
மின் ஆற்றல், நீர், பொருட்கள் போன்ற வளங்களை மிக குறைவாக பயன்படுத்தி, இயற்கையுடன் ஒத்துழைக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்படும் வீடுகளே பசுமை கட்டடங்கள். ஆய்வுகளின்படி, இத்தகைய கட்டடங்கள் சாதாரண கட்டடங்களை விட, 20-30 சதவீதம் மின்சாரத்தையும், 30-50 சதவீதம் தண்ணீரையும் மிச்சப்படுத்துகின்றன என்கிறார், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு(கிரிக்) மாநில தலைவர் பொன்குமார்.
அவர் மேலும் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
நீர்வள பாதுகாப்பில் பெரிய பங்கு மழைநீர் சேகரிப்பு. கழிவுநீர் சுத்திகரிப்பு, குறைந்த ஓட்டம் கொண்ட குழாய்கள், தோட்டத்திற்கான தண்ணீர் பயன்பாடு போன்ற முறைகள் நகர நீர் குறைபாட்டை தடுக்கும் முக்கிய வழிகளாக உள்ளன. இதன் வாயிலாக நிலத்தடி நீர் மட்டமும் மேம்படுகிறது.
பசுமை கட்டடங்கள் நீரை சிக்கனபடுத்துகின்றன. கட்டடத்தின் வெளிப்புற சூழலையும், உள்ளக சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால், சுத்தமான காற்றோட்டம், குறைந்த நச்சு கொண்ட பூச்சு, வண்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இயற்கை வெளிச்சம், வெப்பநிலை கட்டுப்பாடு காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி, தலைவலி போன்ற பிரச்னைகள் குறைந்து, குழந்தைகள், முதியவர்கள் ஆரோக்கியமாக காணப்படுகின்றனர். குடும்பத்தில் மன அமைதி அதிகரிக்கும்; அலுவலகங்களில் உற்பத்தித்திறன் உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கட்டடத் துறையானது, இந்தியாவின் மின்சார தேவையில் 20 சதவீதத்துக்கும் மேலாக பங்கு வகிக்கிறது. இது, கார்பன் உமிழ்வு அதிகரித்து, காலநிலை மாற்றத்துக்கு காரணமாகிறது.
பசுமை கட்டடங்கள் ஆற்றல் வீணாவதை குறைத்து, நகரங்களின் கார்பன் தடத்தை குறைத்து, தேசிய அளவிலான காலநிலை பாதுகாப்பு முயற்சிக்கு, சக்திவாய்ந்த ஆதரவாக மாறுகின்றன. பசுமை முன்னோடி நகராக, கோவை மாறி வருகிறது. இங்கு பசுமைக் கட்டடங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த முன்னோடி முயற்சிகள் மேலும் வளர, பொது மக்கள் புதிய வீடு, அலுவலகம், திருமண மண்டபம், பள்ளி போன்றவற்றை திட்டமிடும் போதே, பசுமைக் கட்டடக் கோட்பாடுகளை பின்பற்றுதல் அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

