/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு கட்டும் இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மணல்; அடித்தளம் விஷயத்தில் பொறியாளர்கள் 'அலர்ட்'
/
வீடு கட்டும் இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மணல்; அடித்தளம் விஷயத்தில் பொறியாளர்கள் 'அலர்ட்'
வீடு கட்டும் இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மணல்; அடித்தளம் விஷயத்தில் பொறியாளர்கள் 'அலர்ட்'
வீடு கட்டும் இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மணல்; அடித்தளம் விஷயத்தில் பொறியாளர்கள் 'அலர்ட்'
UPDATED : டிச 06, 2025 08:04 AM
ADDED : டிச 06, 2025 06:30 AM

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கட்டிய ஜி+1 வீடு(சுவர் தாங்கும் கட்டுமானம்) ஒன்று உள்ளது. 1: -பாபு:
இரண்டாம் தளத்தில், 400 சதுரடி படுக்கை அறை கட்டுவதற்கு வெளிச்சுவர், 100 மி.மீ., கனமுள்ள முன்வார்த்த கான்கிரீட் கட்டுகள், 1:4 என்ற சிமென்ட் கலவையில் அமைக்க வேண்டும். மேற்கூரையானது ஆஸ்பெஸ்டாஸ்ஓடு அமைக்க கூடாது. மாறாக, வெப்ப தடுப்பு பொருத்திய வண்ணம் பூசிய 'கேல்வலுமே ஷீட்' பொருத்தலாம். இதற்கு கீழ் 'பால்ஸ் சீலிங்' போட்டுக்கொள்ளலாம்.
'கான்கிரீட் கேன்வாஸ்' கொண்டு வளைவான சுவர்கள்: - நந்தக்குமார்: தங்களின் கேள்வி மிகச்சிறந்த தொழில்நுட்பம் உடையது. கான்கிரீட்டை பாய் போல எளிதாக சுருட்டி கான்கிரீட் கேன்வாஸ் கூரைகள், கூண்டு வீடுகள் எல்லாம் அமைக்கலாம். பல நாடுகளிலும் இப்படிப்பட்ட வளைவான சுவர்கள், கூரைகள், சன்ஷேடுகள், கான்கிரீட் கால்வாய் மேலுறைகள் என, எண்ணற்ற கட்டுமானங்கள் உருவாக்கலாம்.
இந்த கான்கிரீட் கேன்வாஸின் அடியில், ஒரு நீர் தடுக்கும் பி.வி.சி., அட்டை, அதன்மீது 3டி ஜியோ சிந்தெடிக் மேட்ரிக்ஸ், அதன்மீது உலர் கான்கிரீட் கலவை மற்றும் அதன்மீது தண்ணீர் உறிஞ்சும் மேலுறை கலந்த கூட்டுப்பொருளின் மீது, தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி, வேண்டிய வளைவில் அழுத்தி கான்கிரீட் கேன்வாஸை தயாரிக்கின்றனர். இதனுடைய தயாரிப்பு முறை, வகைகள் மற்றும் தாங்கும் தன்மைகள் ஆகியன குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கிறது.
ஜி+2 வில்லா டைப் வீடுகள் நான்கு கட்ட இருக்கிறேன். மண் பரிசோதனையின்போது ஒரு மீட்டர் ஆழத்தில்: -குமார்: 2 மீ., ஆழம் வரை தோண்டி, 450 மி.மீ., ஆழத்திற்கு மூன்று அடுக்குகளாக(150 மி.மீ., உயரத்திற்கு) கருங்கல் உடைதுாள், செஞ்சரளை மண், 1:3 என்ற அளவில் கலந்து, சிறிது தண்ணீர் கலந்து ஒவ்வொரு முறையும் நன்றாக கெட்டிப்படுத்த வேண்டும்.
இதன்மீது வடிவமைப்பு பொறியாளர் தயாரித்து கொடுத்த தனிப்பரவல் அடித்தளத்தை அமைத்து கட்ட வேண்டும். சுவர்களுக்கு, 150 மி.மீ.,/200 மி.மீ., கனம் கொண்ட முன்வார்த்த கெட்டி கான்கிரீட் கட்டுகளை பயன்படுத்த வேண்டும்.
கட்டடவியல் புதிய தொழில்நுட்பங்களில் சிறந்தது எது? ஏன்?: -கண்ணன்: நிறைய தொழில்நுட்பங்களை பட்டியலிடலாம். அதில், பிரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானம், லார்ஜ் ஸ்பேஸ் (காலம் பிரீ) பி.டி., ஸ்லாப் கட்டுமானம், பிரீபேப்ரிகேட்டெட் ஸ்டீல் ஸ்டிரக்ச்சர், டெம்பரரி டென்சில் ஸ்டிரக்ச்சர்ஸ் கான்கிரீட் கேன்வாஸ், ஜியோ சிந்தெடிக் ஸ்டிரக்ச்சர் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை எல்லாம் கட்டுமான காலத்தை மிகவும் குறைக்கின்றன. தேவைப்படும் வேலையாட்களும் குறைவு.
சுவருக்கான வால்பட்டி என்றாலே: -சிவலிங்கேஸ்வரி: வால்பட்டி வெண்மையாக மட்டுமல்ல; வேண்டிய நிறங்களை பெற நிறமூட்டிகள் கலந்தால் எளிதாக பெறலாம். ரெடிமேட் வண்ண வண்ண கலர் பட்டிகள் வெளிச்சந்தைகளில் கிடைக்கின்றன.
-மாரிமுத்துராஜ்: உறுப்பினர்: கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா):

