தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதில் எழும் சந்தேகங்கள்!

 வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதில் எழும் சந்தேகங்கள்!

 வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதில் எழும் சந்தேகங்கள்!


ADDED : பிப் 07, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய சூழலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் அதற்கான பணிகளை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான பணிகளை எப்படி மேற்கொள்வது என்பதை வீடு கட்ட நினைப்பவர்கள் சரியாக புரிந்து செயல்பட வேண்டும்.

சமீப காலமாக, வீடு கட்டும் பணிகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் உரிமையாளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர், பொறியாளரில் யாரிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது.

பொறியாளர் பின்னணியுடன் இருக்கும் ஒப்பந்ததாரை தேர்வு செய்வது நல்லது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதில் நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்திடம், எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

வீடு கட்டும் பொறுப்பை கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது கட்டுமான ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியம். நிலத்தின் அளவு அதில் கட்ட வேண்டிய வீட்டின் அளவு, வடிவமைப்பு, சிறப்பு வசதிகள் அடிப்படையில் ஒப்பந்த தொகையை முடிவு செய்யலாம்.

கட்டுமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலையில், அதில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பில் என்னென்ன பணிகள் அடங்கும் என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாக பேசி முடிக்க வேண்டும்.

வீடு கட்டும் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த பட்டியலையும் கட்டுமான ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிவிக்க வேண்டும். வாகன நிறுத்துமிடம், மேல் நிலை தண்ணீர் தொட்டி, கழிவு நீர் தொட்டி, கீழ் நிலை தொட்டி ஆகிய பணிகள் கட்டுமான ஒப்பந்தத்தில் சேருமா என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

கட்டுமான பணிகள் எப்போது துவங்கும், எப்போது முடியும் என்பதற்கான கால அட்டவணையை முடிவு செய்து அதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், அது தொடர்பான பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

கட்டுமான அனுமதி பெறுவது, கட்டுமான பொருட்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களையும் ஆரம்பத்திலேயே தெளிவாக முடிவு செய்யுங்கள். கட்டுமான ஒப்பந்தத்தை முறிப்பதற்கான சூழல் ஏற்பட்டால் யார், யாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

வாகன நிறுத்தும் இடம், மேல் நிலை தண்ணீர் தொட்டி, கழிவு நீர் தொட்டி, கீழ் நிலை தொட்டி ஆகிய பணிகள் கட்டுமான ஒப்பந்தத்தில் சேருமா என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us