sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

'ரெடிமிக்ஸ்' செலுத்திய இரண்டு மணி நேரத்தில் வெடிப்பு; பயப்படாதீங்க என்கிறார் கட்டுமான பொறியாளர்

/

'ரெடிமிக்ஸ்' செலுத்திய இரண்டு மணி நேரத்தில் வெடிப்பு; பயப்படாதீங்க என்கிறார் கட்டுமான பொறியாளர்

'ரெடிமிக்ஸ்' செலுத்திய இரண்டு மணி நேரத்தில் வெடிப்பு; பயப்படாதீங்க என்கிறார் கட்டுமான பொறியாளர்

'ரெடிமிக்ஸ்' செலுத்திய இரண்டு மணி நேரத்தில் வெடிப்பு; பயப்படாதீங்க என்கிறார் கட்டுமான பொறியாளர்


ADDED : செப் 20, 2024 10:24 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கள் வீட்டில் குளியலறை வரும் இடத்தில் 'சன்கென் ஸ்லாப்' போட வேண்டும் என்று, எங்கள் இன்ஜினியர் கூறுகிறார். இது சரியான முறையா?

-சிவகுமார், சூலுார்.

இது சரியான முறைதான். குளியலறை வரும் இடத்தில், குளிக்கும் நீரினை மற்றும் கழிவு நீரினை அதற்குரிய 'டிராப்'களில் கொண்டு சேர்த்து, வெளியேற்ற வேண்டும். எனவே, அந்த குழாய்களை டைல்ஸ்க்கு கீழே மறைத்து கொண்டு செல்லவும், வாட்டம் கொடுக்கவும் இந்த சன்கென் சிலாப் பகுதி அவசியமாகிறது.

இதற்காக, டாய்லெட் பகுதியில் சராசரியாக, 9 இன்ச் கீழ் இறக்கி சிலாப் அமைத்தல் நன்று. கீழ் பகுதியில்(கட்டாயம்) பால்ஸ் சீலிங் அமைப்பதாக இருந்தால், மேற்கூறிய முறையைத் தவிர்த்து, சன்கென் ஸ்லாப் அமைக்காமல், ஒரே மட்டத்தில் ஸ்லாப் அமைத்து, 'சீலிங் சஸ்பெண்டெட் பிளம்பிங்' முறையில் பிளம்பிங் பணி மேற்கொள்ளலாம். எனினும், இரு முறைகளும் சரியே.

நாங்கள் கட்டியுள்ள வீட்டில், போர்டிகோவில் உள்ள பில்லர்களில் ஒருஅடி வரை நீர்க்கசிவு வருகிறது? இது எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

-சுந்தர், சுந்தராபுரம்.

நீங்கள் 'போர்டிகோ' அருகில் நீர் தொட்டி, செப்டிக் டேங்க் அல்லது சோக் பிட் உள்ளதா என்று குறிப்பிடவில்லை. செப்டிக் டேங்க் அல்லது குடிநீர் தொட்டி கசிவு இருந்தாலோ, சோக் பிட் மிகை நீரினாலோ நீங்கள் சொன்ன கசிவு ஏற்படலாம். அல்லது மழை நீரானது, சரியான வடிகால் இல்லாமல் போர்டிகோ அருகில் தேங்குவதனால்கூட ஏற்படலாம். அவ்வாறு இருந்தால், தக்க 'வாட்டர் புரூப்பிங்' முறையில் இதனை எளிதாக சீர் செய்யலாம். தகுந்தபொறியாளரின்மேற்பார்வையில் செய்தல் நலம்.

நாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டில், ரெடிமிக்ஸ் கான்கிரீட் போட்டு முடித்த இரண்டு மணி நேரத்தில் சிறிய வெடிப்புகளை பார்த்தேன். இது கான்கிரீட்டின் வலிமையை பாதிக்குமா?

-தரூண், தடாகம்.

கண்டிப்பாக பாதிக்காது. வெயில் காலத்தில், சிலாப்பின் மேற்பரப்பு விரைவில் உலர்ந்து, கீழ் பரப்பில் ஈரம் அதிகம் இருக்கும்போது, இது போன்ற வெடிப்புகள் தோன்ற வாய்ப்புள்ளது.

மேலும், தற்போது ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் பல்வேறு நடைமுறை காரணங்களுக்காக, சில சேர்க்கை வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றினால் வேறு பல நன்மைகள் இருந்தாலும், இது போன்ற வெடிப்புகளை அவை ஏற்படுத்திவிடும். ஆனால், இவை ஆழமில்லாத மேற்பரப்பு வெடிப்புகள் மட்டுமே.

இதனால், கான்கிரீட்டின் வலிமை குறையாது. எனினும், சில மணி நேரம் முன்கூட்டியே கான்கிரீட்டின் கியூரிங் பணியினை ஆரம்பித்துவிட்டால், வெடிப்புகள் வருவதை தடுக்கலாம்.

அவ்வாறு வந்துவிட்டாலும், அந்த வெடிப்புகளை தகுந்த மேற்பார்வையின் கீழ், கெமிக்கல்கள் மூலம் சரி செய்துவிடலாம். பயப்படத் தேவையில்லை.

எங்கள் வீடு கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது ஆங்காங்கே கரையான் பிடிக்க துவங்கியிருக்கிறது. அதை எப்படி சரி செய்வது?

-சம்பத்குமார், கோவைப்புதுார்.

கரையான் இப்போதுதான் பிடிக்கத் துவங்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே உடனடியாக கரையான் ஒழிப்பு செய்துவிட்டால், கடுமையான பாதிப்புகளை தவிர்க்கலாம். இதற்கென உள்ள நிபுணர்களை அணுகி, கட்டடத்தின் வெளிப்புற சுற்று சுவர்களை ஒட்டி உள்ள மண்ணில், மற்றும் கட்டடத்தின் உள்ளே சுவர்களின் அருகில், டிரில்லிங் முறையிலும், மரக்கதவு, ஜன்னல்களுக்கு பெயின்டிங் முறையிலும், வேதியியல் பொருட்கள் கொண்டு கரையான் ஒழிப்பு பணி செய்துவிடுவது நல்லது.

காம்பவுண்ட் சுவரின் பேஸ்மென்ட் 'சாலிட் பிளாக்ஸ்' கொண்டு கட்டலாமா?

-சேகர், ராமநாதபுரம்.

கான்கிரீட் பிளாக் கொண்டு பேஸ்ட்மென்ட் அமைப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் கான்கிரீட் சாலிட் பிளாக்குகள், மிகுந்த நீர் ஊடுருவக்கூடிய தன்மை வாய்ந்தவை. பேஸ்ட்மென்ட் சுவர்களில் நீர் புகுந்தாலும், நீர் நீண்ட நாள் தங்கினாலும், சுவற்றின் உறுதித் தன்மை நாளடைவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே, நீரினை மிகக் குறைவான அளவே உறிஞ்சும் தன்மையுடைய பிளை ஆஷ் செங்கல்களை, பேஸ்மென்ட் பணிகளுக்கு உபயோகிக்கலாம்.

-பொறியாளர் செவ்வேள்

துணைத் தலைவர்

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).






      Dinamalar
      Follow us