/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
முதல் முறையாக 'புளோர் வில்லா' வீடுகள்: 'காசா கிராண்ட்' அறிமுகம்
/
முதல் முறையாக 'புளோர் வில்லா' வீடுகள்: 'காசா கிராண்ட்' அறிமுகம்
முதல் முறையாக 'புளோர் வில்லா' வீடுகள்: 'காசா கிராண்ட்' அறிமுகம்
முதல் முறையாக 'புளோர் வில்லா' வீடுகள்: 'காசா கிராண்ட்' அறிமுகம்
ADDED : பிப் 03, 2024 09:20 AM
நாட்டில் முதல் முறையாக, சோழிங்கநல்லுார் அருகில், 'புளோர் வில்லா' வகையில் வீடுகள் விற்பனை செய்யும் திட்டத்தை 'காசா கிராண்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக வைத்து செயல்படும், காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம், சென்னை, கோவை, பெங்களூரு நகரங்களில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த, 2004ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இதுவரை, 40 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கி உள்ளது.
அடுத்து வரும் ஆண்டுகளில், 8,000 கோடி ரூபாய் மதிப்புக்கு, பல்வேறு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வகையில், சென்னையில் சோழிங்க நல்லுார் அருகில் தாழம்பூரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, காசா கிராண்ட் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இங்கு, 3 ஏக்கர் நிலத்தில், அடித்தள, தரைதளத்துடன், 13 மாடிகள் கொண்டதாக, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும், 3,700 சதுர அடி பரப்பளவில், 5 படுக்கை அறை வீடுகள் கட்டப்பட உள்ளது.
நாட்டில் முதல் முறையாக 'புளோர் வில்லா' என்ற அடிப்படையில் இந்த குடியிருப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தளத்தில் உங்களுக்கான ஒரு வீடு மட்டுமே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், வில்லா வகை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியான நீச்சல் குளம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இங்கு, 10,500 சதுர அடி பரப்பளவு நிலம் சிறப்பு பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு, 1.75 கோடி ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காசா கிராண்ட் நிறுவன வர்த்தக பிரிவு மூத்த துணைத் தலைவர் பி. விமேஷ் கூறியதாவது: ஆடம்பர வசதிகளுடன் தனியான வில்லா வகை பங்களா வீடு வாங்க நினைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சோழிங்கநல்லுாரில் இருந்து, 10 நிமிட பயணத்தில் இங்கு சென்றுவிடலாம்.
ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு உள்ளிட்ட அனைத்து விதிகளையும் கடைபிடித்து, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடுகள், 24 மாதத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் விபரங்களுக்கு, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

