/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீட்டுக்கு எந்த வகை ஜன்னல் அமைப்பதில் எப்படி செயல்பட வேண்டும்?
/
வீட்டுக்கு எந்த வகை ஜன்னல் அமைப்பதில் எப்படி செயல்பட வேண்டும்?
வீட்டுக்கு எந்த வகை ஜன்னல் அமைப்பதில் எப்படி செயல்பட வேண்டும்?
வீட்டுக்கு எந்த வகை ஜன்னல் அமைப்பதில் எப்படி செயல்பட வேண்டும்?
ADDED : மே 18, 2025 07:11 AM
புதிதாக வீடு கட்டும் போது அதில் பிரதான வாயில் கதவு அமைப்பது, அறைகளுக்கு கதவு அமைப்பது போன்ற விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஒரு வீட்டுக்கான வெளிப்புற தோற்றம் மட்டுமல்லாது பாதுகாப்பு விஷயத்திலும் கதவுகள் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.
ஒரு காலத்தில் வீட்டுக்கான பிரதான வாயிலில் அமைக்கப்படும் கதவுகள் அதன் உரிமையாளரின் சமூக பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் காரணியாக பார்க்கப்பட்டது. இதனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து மரங்களை இறக்குமதி செய்து, அதில் மிகுந்த கலைவேலைபாடுகளுடன் கதவுகள் செய்வார்கள்.
ஆனால், தற்போது, அதிக கலை வேலைபாடுகள் உள்ள கதவுகள் செய்வதைவிட, நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்களுக்கு மக்கள் முக்கித்துவம் கொடுக்கின்றனர். இதனால், புதிய வகை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கதவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
கதவுகளுக்கு அடுத்தபடியாக வீட்டில் எந்தெந்த இடத்தில் எத்தகைய ஜன்னல் அமைப்பது என்பதிலும் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதில் பாதுகாப்பு மற்றும் வெளிப்புற சூழல் அடிப்படையில் ஜன்னல் அமையும் இடங்களை மக்கள் தேர்வு செய்கின்றனர்.
இதில் ஒரு காலத்தில் மரத்தால் தயாரிக்கப்பட்ட ஜன்னல்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, யு.பி.வி.சி., அலுமினியம், மரம் ஆகிய வகைகளில் வீட்டுக்கான ஜன்னல்கள் தயாரிக்கப்படும் நிலையில் இதில் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
கட்டுமான பணியின் போது ஜன்னல்களை பொருத்துவது என்ற அடிப்படையில் பார்த்தால், யு.பி.வி.சி., அலுமினியம் ஜன்னல்களை எளிதாக அமைக்கலாம்.
குறிப்பாக ஜன்னலுக்கான இடத்தை காலியாக விட்டு மற்ற பணிகளை முடித்துவிட்டு கடைசியாக இவற்றை அமைக்கலாம். அப்போதும், கட்டடத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இன்றி, மெல்லிய துளைகள் இட்டு அதில் ஸ்குரு பயன்படுத்தி இவ்வகை ஜன்னல்களை அமைத்துவிடலாம்.
இதில் பிரேம்கள் எப்படி இருக்க வேண்டும், கதவுகள் எப்படி இருக்க வேண்டும், நடுவில் வரும் கிரில் கம்பிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக யு.பி.வி.சி., அலுமினியம் ஜன்னல்களை வாங்கும் போது, கட்டடத்தில் விடப்பட்ட இடைவெளியை துல்லியமாக அளந்து அதற்கு ஏற்ற வகையில் வாங்குவது அவசியம்.
இதில் அனைத்து ஓரங்களும் சரியாக பொருந்தி இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.