/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டட பழுதுக்கான காரணங்களை தெரிந்து கொள்வது எப்படி?
/
கட்டட பழுதுக்கான காரணங்களை தெரிந்து கொள்வது எப்படி?
கட்டட பழுதுக்கான காரணங்களை தெரிந்து கொள்வது எப்படி?
கட்டட பழுதுக்கான காரணங்களை தெரிந்து கொள்வது எப்படி?
ADDED : பிப் 03, 2024 09:33 AM

கட்டடங்களில் நீர்க் கசிவு பிரச்னைகள் பிரதான பாதிப்பாக உள்ளன. இவை ஏற்படும் போது பதற்றப்படுவதைவிட, அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட சுவர்கள், துாண்கள், பீம்கள், மேல்தளங்கள் ஆகியவற்றில் இயல்பாக பழுது ஏற்படும். இதற்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாக கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பர். கட்டு மான துறையுடன் தொடர்பு இல்லாத நபர்கள் இந்த விபரங்களை தெரிந்து வைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
ஆனால், வீடு கட்டும் போது தேவை அடிப்படையில் கட்டுமான தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. தரமற்ற கட்டுமான பொருட்கள், மோசமான தொழில்முறைகள் கூட கட்டடங்களில் பழுது ஏற்பட காரணமாக உள்ளன.
தரமான செங்கல் பயன்படுத்துகிறோம் என்று இருந்தால் போதாது, சுவர் எழுப்புவதில் செங்கற்களை இணைக்க பயன்படுத்தும் சிமென்ட் தரமானதாக இருக்க வேண்டும்.
சுவர் கட்டும் வேலைக்கான சிமென்ட் கலவை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மணல் தரமானதாக இருக்க வேண்டும்.இவை அனைத்தும் சரியாக இருந்தாலும், கலவை தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசு அற்றதாக இருக்க வேண்டும்.
இந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருந்தாலும், இவை சரியான விகிதங்களில் சேர்க்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.பணியாளர்கள் நிலையிலும் சில தவறுகள் நடக்கலாம் என்பதால் கண்காணிப்பில் கவனமாக இருக்க வேண்டும். சிமென்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களை தரமானதாக தேடிபிடித்து வாங்குவதில் மிக கவனமாக இருப்பது அவசியம்.
பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை மட்டும் சரி செய்தால் போதாது. அத்துடன், கட்டடத்தில் வேறு ஏதாவது பழுது உள்ளதா என்பதையும் ஆய்வு செய்வது அவசியம்.
குறிப்பாக மழைக்காலத்துக்கு முன்னும், பின்னும் கட்டடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம். இப்படி முறையாக பராமரித்து வந்தால், கட்டடத்தின் ஆயுள் குறையாமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

