/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பிளம்பிங் சரியாக இருந்தால் 'அப்பாடா'... செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
/
பிளம்பிங் சரியாக இருந்தால் 'அப்பாடா'... செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
பிளம்பிங் சரியாக இருந்தால் 'அப்பாடா'... செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
பிளம்பிங் சரியாக இருந்தால் 'அப்பாடா'... செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
ADDED : நவ 29, 2025 12:19 AM

'பி ளம்பிங்' வேலையை பொறுத்தவரையில் இரண்டு வகைப்படும். ஒன்று பயன்படும் நீர், மற்றொன்று பயன்படுத்தப்பட்ட நீர். பயன்படும் நீர் என்பது நமது வீட்டு பயன்பாட்டிற்காக நிலத்தடி தொட்டியிலிருந்தும் போர்வெல் கிணற்றிலிருந்தும், மேல்நிலைத் தொட்டிக்கு எடுத்து சென்று பின்பு பல்வேறு பயன்பாட்டிற்காக குழாய் வழியாக நாம் உபயோகப்படுத்தும் தண்ணீர்.
பொதுவாகவே வீட்டினுள், 'கன்சீல்ட் பைப் லைன்' முறையிலேயே பிளம்பிங் வேலை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யும் வேலைகளுக்கு சி.பி.வி.சி., குழாய்களை பயன்படுத்துவதே சிறந்தது. கன்சீல்டு பைப்லைன் வேலை முடிந்த பின்பு, அழுத்த சோதனை செய்து கொள்வதால் நீர்க்கசிவு வராமல் தடுக்கலாம்.
பின்பு வீட்டுக்கு வெளியில், திறந்தவெளியாக செல்லும் அமைப்புகளுக்கு யூ.பி.வி.சி., மற்றும் பி.வி.சி., குழாய்களை பயன்படுத்தலாம். மேல்நிலைத் தொட்டியில் இருந்து இரண்டு அல்லது மூன்று கழிவறைகள் செல்லும் வகையில், குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.
அவற்றுக்கு தனித்தனியே குழாய் இணைப்பு அமைப்பதால், அதன் அழுத்தம் நன்றாகவே இருக்கும். அது மட்டுமின்றி, சரியான சுற்றளவுகளை கொண்ட குழாய்களை பயன்படுத்துவதும் முக்கியமாகும். தேவையான இடங்களில், 'ட்ராப்'களை பயன்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான், துர்வாடை வீசுவதை தடுக்க முடியும். நிலத்தில் பதிக்கும் பி.வி.சி., பைப்புகள் தரமான சுவர் தடிமன்களை கொண்ட குழாய்களையே பயன்படுத்த வேண்டும்.
அதிக வாட்டம் இல்லாமல், தேவையான வாட்டம் கொடுத்தால் மட்டுமே வெளியேற்றப்படும் திடக்கழிவுகள், முழுவதுமாக சென்று கழிவுநீர் தொட்டியினுள் சேரும். அதைப் போன்று தேவையான இடங்களில், 'வென்ட் பைப்' அமைப்பதிலும் கவனம் கொள்ள வேண்டும். இதனால், நீரோட்டம் சீராக இருப்பது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.
கழிவறை, சமையல் அறைகளில் பிளம்பிங் வேலைகளில், அடிக்கடி பிரச்னைகள் வராமல் இருக்க, தரமான 'சானிட்டரி பிட்டிங்'களையும், குழாய்களையும் பயன்படுத்த வேண்டும்.
முடிந்தளவு உப்பு நீர் பயன்பாட்டிற்கும், நல்ல தண்ணீருக்கும் தனி குழாய் இணைப்பு மற்றும் மேல்நிலை தொட்டியும் அமைத்துக் கொள்வதால், 'பிட்டிங்'களின் ஆயுள் நீடித்து உழைக்கும். பிளம்பிங் பணிகள் எவ்வளவு தரமானதாக செய்திருந்தாலும், இரு வாரங்களுக்கு ஒரு முறை முறையாக பராமரிப்பு பணிகளை செய்தால், பிளம்பிங் வேலையில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
-ரவிச்சந்திரன்: உறுப்பினர்:

