sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

 மனை வாங்குவோர் உட்பிரிவு பட்டா பெறுவதில் கவனமாக இருக்கணும்!

/

 மனை வாங்குவோர் உட்பிரிவு பட்டா பெறுவதில் கவனமாக இருக்கணும்!

 மனை வாங்குவோர் உட்பிரிவு பட்டா பெறுவதில் கவனமாக இருக்கணும்!

 மனை வாங்குவோர் உட்பிரிவு பட்டா பெறுவதில் கவனமாக இருக்கணும்!


ADDED : பிப் 28, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் சமீப காலமாக புதிதாக மனைப்பிரிவு திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுத்தப் படுகின்றன. இந்த மனைப்பிரிவுகளில் நிலம் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்படுவதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வேகமாக செயல்படுகின்றன.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, கட்டுமான நிறுவனங்களும் தற்போது மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ள பிரீமியம் மனைகளை விற்பனை செய்கின்றனர்.

பொதுவாக காலி மனை வாங்க வங்கிகள் கடன் கொடுப்பதில்லை, அதில் வீடு இருந்தால் மட்டுமே வீட்டுக்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவியது. காலி மனைகள் வாங்குவதற்கும் வீட்டுக்கடன் கொடுக்கும் அளவுக்கு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை.

ஆனால், பொதுத்துறை, தனியார் வங்கிகள் காலி நிலம் வாங்குவதற்கும் சலுகை வட்டியில் கடன் கொடுக்கும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்துகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதை குறிவைத்து பிரீமியம் என்ற பெயரில் அதிக விலைக்கு மனைகளை விற்க களம் இறங்கியுள்ளன.

இதனால், மக்கள் இது போன்ற புதிய திட்டங்களில் மனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இது போன்ற திட்டங்களில் மனை வாங்குவோர் அதற்கான உட்பிரிவு பட்டா பெறுவதில் உரிய கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.

சொத்து வாங்கும் போது அதற்கு தனியார் பெயரில் பட்டா இருந்தால் போதும் என்ற அடிப்படையில் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். உண்மையில், ஒரு சொத்தை பட்டாவில் உள்ளபடி முழுமையாக வாங்கினால் பத்திரப்பதிவு நிலையிலேயே அதற்கான பட்டா மாறுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரப்பதிவின் போது சார்-பதிவாளர் இதை செய்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, உட்பிரிவு செய்ய வேண்டிய நிலையில் அதற்கான விண்ணப்பத்தை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

அந்த விண்ணப்பம் குறுவட்ட நில அளவருக்கு செல்லும், இனி அனைத்தையும் அவர் பார்த்து கொள்வார் என்று நீங்கள் அமைதியாக இருந்து விட கூடாது. உங்கள் பகுதிக்கான குறு வட்ட நில அளவர் யார் என்பதை விசாரித்து அறிந்து அவரை தொடர்பு கொண்டு நிலத்தை அளக்க எப்போது வருகிறார் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சில இடங்களில் தான் விண்ணப்பம் பதிவான சில நாட்களில் குறுவட்ட நில அளவர் தானாகவே உங்களை அழைப்பார். அவர் சொல்லும் நாளில் நிலத்துக்கு நீங்கள் நேரில் சென்று நில அளவை பணிகளை முடிக்க வேண்டும்.

இதில் நிலத்தை அளக்கும் போது உரிமையாளர் உடன் இருக்க வேண்டும் என்பதில் அலட்சியமாக இருக்க கூடாது. உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் போது பெயர் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக கொடுத்தால் மட்டுமே பிழை இல்லாத பட்டா கிடைக்கும் என்கின்றனர் வருவாய் துறை அலுவலர்கள்.

பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து விட்டு, அமைதியாக இருந்துவிடக்கூடாது, குறுவட்ட நில அளவர் யார் என்று பார்த்து தொடர் நடவடிக்கைகளை விசாரித்தால் மட்டுமே பணிகள் விரைவாக முடியும்.






      Dinamalar
      Follow us