தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ உங்கள் வீட்டை அழகுபடுத்த உதவும் எளிய வழிமுறைகள் !

 உங்கள் வீட்டை அழகுபடுத்த உதவும் எளிய வழிமுறைகள் !

 உங்கள் வீட்டை அழகுபடுத்த உதவும் எளிய வழிமுறைகள் !


ADDED : பிப் 21, 2026 08:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 08:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் 'ேஹாம் டூர்' என்ற பெயரில் வெளியிடப்படும் வீடியோக்கள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன. ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தங்கள் வீட்டை இப்படி மிகவும் அழகாக வைத்திருக்கிறாரே என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

இப்படி, பிரபலங்களின் ேஹாம் டூர் வீடியோக்களை பார்த்து, நமது வீடு இப்படி அழகாக இல்லையே என்று பலரும் நொந்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. பொதுவாக பிரபலங்களின் வீடுகள் என்றால் அதை பராமரிப்பதற்கு என ஆட்கள் நிறைய இருப்பார்கள், பயன்பாட்டு நிலையில் கட்டுப்பாடு அதிகம் இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அப்பால், தினசரி பயன்பாட்டில் உள்ள வீட்டை அழகு படுத்த வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை வழிமுறைகளை சரியாக புரிந்து செயல்பட்டால் போதும். வீட்டு உள் அலங்காரம் என்பதில், சரியாக திட்ட மிட்டு செயல்பட்டால் உங்கள் வீடும் அழகாக மாறிவிடும்.

புதிதாக வீடு கட்டும் போது அதற்கான வரை படத்திட்ட அடிப் படடையில் உள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். தற்போது, வீடுகளின் அடிப்படை அளவுகளை கொடுத்தால் போதும் 3டி எனப்படும் முப்பரிமான முறையில், வரைபடங்களை இணையதளங்கள் தயாரித்து வழங்குகின்றனர்.

இந்த வரைபடத்தை உள் அலங்காரத்துக்கான இணையதளத்தில் உள்ளீடு செய்தால் போதும், எந்த வகையான அலங்காரம் அந்த வீட்டுக்கு என்பது தொடர்பான ஏராளமான மாதிரிகள் வந்து குவியும். அதன் அடிப்படையில் வீட்டை அழகுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, ஒரு வீட்டை அழகுபடுத்துவது என்பதற்காக பல்வேறு வகை பொருட்களை வாங்கி குவிப்பதை தவிர்த்து, மிக குறைந்த பொருட்கள் இருந்தால் போதும் என்ற அளவில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டு சுவர் வண்ணங்கள், கதவு, ஜன்னல் பகுதிகளுக்கான திரைச்சீலைகள் ஆகியவற்றை சரியாக தேர்வு செய்யுங்கள்.

வீட்டில் உள்ளவர்களின் தினசரி பழக்க வழக்கம் என்ன, தேவைகள் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இயற்கையான காற்று, வெளிச்சம் வீட்டுக்குள் தடையின்றி வந்து செல்வதை உறுதி செய்யுங்கள்.

வீட்டு உள் அலங்காரம் என்ற பெயரில் அலமாரிகள் அமைப்பது அதில் பொருட்களை முறையாக அடுக்கி வைத்து விட்டால் போதும் என்று இருந்துவிடாதீர்கள். அந்த பொருட்களை யாரும் பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமில்லை.

தினசரி தேவைக்கு பொருட்களை பயன்படுத்தும் பொருட்களை எந்த இடத்தில் இருந்து எடுத்தாலும், அதை சரியாக மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பழக்கம் வந்து விட்டால் போதும். வீட்டை அழகுபடுத்தும் பணிகள் மிக எளிதாக முடிந்துவிடும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுநர்கள்.

வீட்டில் உள்ளவர்களின் தினசரி பழக்க வழக்கம் என்ன, தேவைகள் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே உள் அலங்காரத்தின் முதல்படி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us