தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ வீட்டுக்குள் எந்தெந்த இடங்களில் கதவுகளை அமைப்பது என்பதை திட்டமிடுங்கள்!

வீட்டுக்குள் எந்தெந்த இடங்களில் கதவுகளை அமைப்பது என்பதை திட்டமிடுங்கள்!

வீட்டுக்குள் எந்தெந்த இடங்களில் கதவுகளை அமைப்பது என்பதை திட்டமிடுங்கள்!


ADDED : ஆக 22, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொ ந்தமாக வீடு கட்டும் போது அதன் வடிவமைப்பு, அளவு உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக வீடு கட்டுவோர் தங்கள் நிலத்தின் அளவு, அதில் கட்டப்பட வேண்டிய கட்டடத்தின் அளவு விபரங் களை கொடுத்து வரைபடம் தயாரிக்க சொல்கின்றனர்.

இதில் அந்த கட்டடத்துக்கு எந்தெந்த இடத்தில், துாண்கள், பீம்கள், சுவர் அமைய வேண்டும் என்பது கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதற்கு அப்பால் கட்டடத்துக்கான வரைபடம் தயாரிப்பு நிலையில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில், மக்கள் அதிக தவறு செய்கின்றனர்.

குறிப்பாக, ஒரு கட்டடம் கட்டும் போது முந்தைய காலத்தில் சில அடிப்படை வழிமுறைகள் பின்பற்றப் பட்டன. அதாவது வீட்டின் தலைவாசல் எங்கு அமைய வேண்டும் என்பதில் துவங்கி, அதை மையமாக வைத்து பிற அறைகள் வடிவமைக்கப்பட்டன.

அதாவது, வீட்டின் எந்த அறையில் இருந்தாலும் அங்கிருந்து நேரடியாக தலைவாசலுக்கு செல்வதற்கு வழி என்ன என்ற அடிப்படையில், வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் நடந்து செல்வோருக்கு மட்டுமல்லாது, வெளிச்சம், காற்றோட்டம் ஆகிய விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஆனால் சமீபகாலமாக கட்டடத்தின் உட்புற அறைகள், அவற்றின் கதவுகள் எப்படி அமைய வேண்டும் என்பதில் மக்கள் சரியாக கவனம் செலுத்துவதில்லை. கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டு நிலையில் தான் இதில் குறைபாடுகள் தெரியவருகின்றன.

உதாரணமாக, ஒரு வீட்டை கட்டி முடித்த நிலை யில் அதில் வரவேற்பு அறை பிரதானமாக அமைந்து இருக்கும். வரவேற்பு அறையில் போடப்படும் பர்னீச்சர்களில் ஒருவர் அமரும் நிலையில் அவர் பார்வையில் எந்த விஷயம் தெரிய வேண்டும், எந்த விஷயம் தெரிய கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

வரவேற்பு அறையில் அம ரும் நபருக்கு, அங்குள்ள குளியலறையின் வாயில், கதவு நேரடியாக தெரிய கூடாது. குளியலறைக்கும், வரவேற்பு அறைக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதை வரைபட நிலையிலேயே உறுதி செய்ய வேண்டும்.

ஒரு கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கப்படும் நிலையில் உட்புற அறை களின் வாயில்கள், கதவுகள் எங்கு அமைய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, குளியலறை, படுக்கை அறை போன்றவற்றின் கதவுகள் உட்புற மாக இருப்பதை உறுதி செய்வது நல்லது.

அதிக வளைவுகள், திருப்பங்கள் இன்றி பெரிய அளவிலான பொருட்களை வீட்டுக்குள் கொண்டு வருவதற்கும், வெளியில் எடுத்து செல்வதற்கும் ஏற்ப வடிவமைப்பை தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக, வரவேற்பு அறையில் இருப்பவர்களுக்கு குளியலறை, படுக்கை அறையின் உட்புறம், சமையலறையின் உட்புறம் ஆகியவை தெரிய கூடாது என்பதில் கவனமாக செயல்படவேண்டும் என்கின்றனர் கட்டுமானதுறை வல்லுனர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us