/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பழைய வீட்டு மொட்டை மாடியில் 'மாடித் தோட்டம்'; தளத்தின் மேல் 'வாட்டர் புரூப் கோட்டிங்' அவசியம்
/
பழைய வீட்டு மொட்டை மாடியில் 'மாடித் தோட்டம்'; தளத்தின் மேல் 'வாட்டர் புரூப் கோட்டிங்' அவசியம்
பழைய வீட்டு மொட்டை மாடியில் 'மாடித் தோட்டம்'; தளத்தின் மேல் 'வாட்டர் புரூப் கோட்டிங்' அவசியம்
பழைய வீட்டு மொட்டை மாடியில் 'மாடித் தோட்டம்'; தளத்தின் மேல் 'வாட்டர் புரூப் கோட்டிங்' அவசியம்
ADDED : மார் 19, 2025 08:21 AM

வீட்டு குளியல் அறைகளில் தரையில் அமைந்துள்ள டைல்ஸ்களில் பில்லிங் பவுடர்கள் அடிக்கடி மாற்ற வேண்டி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
-சம்பத்குமார்,வடவள்ளி.
அங்குள்ள டைல்ஸ்களில் பில்லிங் பவுடர்களை அகற்றிவிட்டு 'எபாக்சி பில்லிங் கெமிக்கல்' பயன்படுத்தி, டைல்ஸ் கேப்புகளை பில் செய்ய வேண்டும். இதனால், தண்ணீர் உட்புகலும் தடுக்கப்படும். மேலும், உறுதி தன்மையும், ஆயுட்காலமும் அதிகம். 'எபாக்சி' பயன்படுத்துவது சிறந்தது. நான் வீடு கட்டி ஆறு மாதம் ஆகின்றது. வீட்டில் உள்ள சுவர்களில் விரிசல் தென்படுகிறது. இதனை தடுப்பது எப்படி?
-பழனியப்பன், சுந்தராபுரம்.
புதிதாக கட்டிய வீடுகளில் இந்த வகையான பூச்சு வெடிப்புகள் வருவது இயல்பு; பயப்படத் தேவையில்லை. இந்த வகையான பூச்சு வெடிப்புகளுக்கு ஒரு வருடங்கள் கழித்து விரிசல் நிவர்த்தி செய்யும் அமிலம் கொண்டு நிரப்ப வேண்டும். இதனால் பூச்சு வெடிப்புகள் மேலும் வராமல் தடுக்க முடியும். வீட்டின் உறுதித் தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நான் வீடு கட்டி, 25 வருடங்கள் ஆகின்றது. மொட்டை மாடியில் மாடித் தோட்டம் அமைக்கலாம் என்று உள்ளோம்; எவ்வாறு அமைப்பது?
-குமார், செல்வபுரம்.
நீங்கள் மேற்கூரையின் மேல் 'வாட்டர் புரூப் கோட்டிங்' அடிக்க வேண்டும். பிறகு அதன் மேல் சிமென்ட் தளம் அமைத்து, பின்னர் அதன்மேல் செம்மண் கொண்டு புல் தரைகள் அமைத்துக் கொள்ளலாம்.
செலவு குறைவாகவும் மாடித்தோட்டம் அமைக்கலாம். இதில், செடிகளுக்கு என பல விதமான தொட்டிகள் வருகின்றன. இவற்றைக் கொண்டு இரும்பு ஸ்டாண்டுகள் அமைத்து, அதன் மேலும், தரையிலும் தொட்டிகளுடன் காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கலாம். பழைய கட்டடம் என்பதால் தளத்தின் மேற்பகுதியில் வாட்டர் புரூப் கோட்டிங் அடித்து பயன்படுத்துவது சிறந்தது.
எனது வீடு கட்டி, 10 வருடங்கள் ஆகும் நிலையில், உட்புறம் உள்ள நிலவில் தற்போது கரையான்கள் உள்ளன. 'பெஸ்ட் கன்ட்ரோல்' அடித்துதான் வீட்டை கட்டினோம். இதற்கான தீர்வுகள் என்ன?
-காந்திமதி, சூலுார்.
ஒவ்வொரு கெமிக்கலுக்கும் ஆயுட்காலம் என்பது உண்டு. இதுபோல நீங்கள் வீட்டில் ஒவ்வொரு ஏழு வருடத்திற்கு ஒரு முறை பெஸ்ட் கன்ட்ரோல் அடித்தால் கரையான் வருவது தடுக்கப்படும். கரப்பான் பூச்சி வருவதை தடுப்பதற்கும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இதை அடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்தி நமது வீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டின் வெளியே சிலிண்டர் வைத்துக்கொண்டு உட்புறம் பயன்படுத்தலாமா?
-சுகந்தி, ராமநாதபுரம்.
தற்பொழுது பெரிய கட்டடங்கள் முதல் சிறிய கட்டடங்கள் வரை அனைத்திலும் சிலிண்டர்களை வெளியே வைத்து காப்பர் குழாய் மூலம் உட்புறமாக கொண்டு சென்று, 'டேபிள் டாப்' மேற்பகுதியில் ஒரு வால்வு பொருத்தி பயன்படுத்தலாம். இது பாதுகாப்பானதாகவும், எளிதாகவும் இருக்கும்.
- ராஜரத்தினம், செயலாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா)