தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ நிலம், நீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத செப்டிக் டேங்க்

 நிலம், நீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத செப்டிக் டேங்க்

 நிலம், நீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத செப்டிக் டேங்க்


ADDED : நவ 14, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொ ந்தமாக வீடு வாங்கும்போது அதில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் வடிகால் தொடர்பான அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய வேண்டும். பெரும்பாலான இடங்களில் வீடு வாங்குவோர், இந்த அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை மேலோட்டமாக விசாரிக்கின்றனர்.

வாங்கும் வீடானது அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் அமைந்திருந்தால் அங்கு எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும். அதிக வீடுகள் இருந்தால், அதில் கழிவு நீர் வடிகால், குடிநீர் வழங்கல் ஆகியவற்றுக்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் இருந்தால், அங்கு இந்த வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செய்யப்பட்டிருக்கும். அதேநேரம் தனி வீடு என்றாலும், அங்கும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.

குறிப்பாக, பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் கான்கிரீட்டால், 'செப்டிக் டேங்க்' கட்டி அதில்தான் கழிவு நீரை சேகரிக்கின்றனர். கான்கிரீட் கட்டுமான முறையில் 'செப்டிக் டேங்க்' அமைக்கும்போது, அதில் நீர் கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

'காட்சியா' உறுப்பினர் பாலசுப்ரமணியன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

தற்போது 'பைபர்கிளாஸ் ரீஇன்போர்சுடு பிளாஸ்டிக்'(எப்.ஆர்.பி.,) தொட்டிகள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொழிற்சாலைகளில் பல்வேறு தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு இத்தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் கசிவுகள் ஏற்பட வாய்ப்புகள் மிக மிக குறைவு.

சில நிறுவனங்கள் கழிவு நீரை சேகரித்து சேமித்து வைப்பதுடன், அதை உயிரி தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்த வகை டேங்க் அமைக்க விரும்புவோர், சிறிய இடம் ஒதுக்கினால் மட்டும் போதும். இவை பல்வேறு அளவுகளில் பல்வேறு வண்ணங்களில் கிடைப்பதால் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில், பாதாள சாக்கடை வசதி இல்லை என்றால் அதற்காக கான்கிரீட் கட்டுமானத்தில், செப்டிக் டேங்க் அமைப்பதற்கு பதில், இதுபோன்ற வசதிகளை பயன்படுத்தலாம். இவை நிலத்துக்கும், நிலத்துடன் நீர் வளத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் அமைந்துள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us