/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பல கோடிகளில் அடுக்குமாடி கட்டட வளாகம் பாதுகாப்பு விஷயத்தில் கட்டமைப்பு முக்கியம்
/
பல கோடிகளில் அடுக்குமாடி கட்டட வளாகம் பாதுகாப்பு விஷயத்தில் கட்டமைப்பு முக்கியம்
பல கோடிகளில் அடுக்குமாடி கட்டட வளாகம் பாதுகாப்பு விஷயத்தில் கட்டமைப்பு முக்கியம்
பல கோடிகளில் அடுக்குமாடி கட்டட வளாகம் பாதுகாப்பு விஷயத்தில் கட்டமைப்பு முக்கியம்
ADDED : ஜன 24, 2025 11:07 PM

கட்டடங்களில் தனி குடியிருப்பு, வணிகம், அடுக்குமாடி குடியிருப்பு என பல வகைகள் உள்ளன. கோவையில் வணிகம், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட, 10 தளங்களுக்கும் மேல் தற்போது சர்வசாதாரணமாக கட்டப்பட்டு வருகிறது. இப்படி அமைக்கப்படும் பல மாடி கட்டட வளாகத்தில் பாதுகாப்பு முறைகள் மிகவும் முக்கியமானது.
'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
வாகன வழித்தடம், 24 அடி அகலத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. காரணம் அவசர காலங்களில் வாகனங்கள் வந்துசெல்ல ஏதுவாக இருக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் மற்றும் கருவிகள் கொண்டு செல்வதற்கான இடைவெளி அளவு முறையாக அமைக்கப்பட வேண்டும்.
லிப்ட், தண்ணீர் குழாய் மோட்டார், இதற்கு தேவையான ஜெனரேட்டர் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள், மீட்டர் ரூம்கள் இருக்க வேண்டும். பெரிய கட்டடங்களில் ஏதேனும் ஓரிடத்தில் தீப்பிடித்தால் மற்ற இடத்திற்கு உடனடியாக தெரியாது.
எனவே, தீ எச்சரிக்கை கருவி கட்டடத்தில் பொருத்தப்பட வேண்டும். தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும். எல்லா கட்டடங்களுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி மூலம் கழிவுநீர் அகற்றம் செய்யப்பட்ட வேண்டும்.
அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். பலமாடி கட்டடத்தில் வடிவமைப்பு, கழிவுகளை தொடக்கத்திலே பிரித்தெடுக்கும் உள்கட்டமைப்பு இருப்பது அவசியம்.
பொது சாலையில் இருந்து நேரடி பாதையாக உள்ளே, மாசு ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவு சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மாநகராட்சி அல்லது நகராட்சி பணியாளர்கள் வெளியே எடுத்துசெல்ல வசதியாக இருக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு வழிவகை செய்திருக்க வேண்டும். இந்த வசதிகளில் ஏதேனும் ஒன்று குறைந்தால்கூட, அது அடுக்குமாடி வீட்டை வாங்கியவருக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம்.எனவே, ஒரு வீட்டை வாங்கும் முன், அனுபவம் மிக்க பொறியாளரிடம் கலந்து ஆலோசித்து ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து வாங்குவது நிம்மதியை தரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

