/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீட்டு எலிவேஷன் அலங்காரத்துக்கு கை கொடுக்கும் டெரகோட்டா ஜாலிகள்!
/
வீட்டு எலிவேஷன் அலங்காரத்துக்கு கை கொடுக்கும் டெரகோட்டா ஜாலிகள்!
வீட்டு எலிவேஷன் அலங்காரத்துக்கு கை கொடுக்கும் டெரகோட்டா ஜாலிகள்!
வீட்டு எலிவேஷன் அலங்காரத்துக்கு கை கொடுக்கும் டெரகோட்டா ஜாலிகள்!
ADDED : பிப் 07, 2026 07:33 AM

சொந்தமா க கட்டும் வீடு தரமானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இதற்காக வீட்டின் கட்டுமான பணியில் தரம் சார்ந்த விஷயங்களில் உரிமையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது .
இதில் சமீப காலமாக வீட்டின் வெளிப்புற தோற் றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் உரிமை யா ளர்கள் இறங்குகின்றனர். தற்போது, புதிய வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் போதே, 3டி எனப்படும் முப்பரிமான முறையில் வீட்டின் வெளிப்புற தோற்றம் குறித்த வரைகலை தயாரிக்கப்படுகிறது.
இதனால், வீட்டின் வெளிப்புற தோற்றம் இப்படி தான் இருக்க போகிறது என்பதை முன்கூட்டியே முடிவு செய்யப்படும் நிலையில், அதற்கு ஏற்றபடி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வெளிப்புற தோற்றத்தில் அழகுக்காக செய்யப்படும் வடிவமைப்புகளை உருவாக்க கான்கிரீட் அல்லது கம்பிகள், கண்ணாடிகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு, கான்கிரீட், கம்பிகள், கண்ணாடிகளை பயன்படுத்தினால், வெளிப்புற தோற்றம் அழகாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதற்கான செலவு, பராமரிப்பு விஷயத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலும் வெளிப்புற அலங்கார பணிகளை மேற்கொள்ள டெரகோட்டா ஜாலிகளை பயன் படுத்தலாம். சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என தேவையான பல்வேறு வடிவங்களில் இந்த ஜாலிகள் கிடைக்கின்றன.
இதில் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகளில் டெரகோட்டா ஜாலிகளை செய்து கொடுக்க நிறுவனங்கள் வந்துவிட்டன. உயர் வெப்ப நிலையில், சுட்டு கொடுக்கப்படுவதால், இதன் உறுதி குறித்த எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
உறுதியாக இருப்பதுடன் வீட்டுக்குள் வெப்பக்காற்று வராமல் தடுப்பதிலும் இந்த வகை ஜாலிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. தற்போதைய சூழலில், ஒரு கல், 70 ரூபாய் முதல், 150 ரூபாய் என்ற விலையில் இது விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டின் வெளிப்புற தோற்றத்துக்கான எலிவேஷன் சுவர், பால்கனி, மாடிப்படி தடுப்பு சுவர் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். சிமென்ட் கலவை பயன்படுத்தி, இவற்றை சுவருடன் இணைக்கலாம்; அதே நேரம், வண்ணம் அடிக்கும் செலவு மிச்சமாகிறது.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் அடித்து கழுவிவிட்டால் போதும் என்ற அளவிலேயே இதற்கான பராமரிப்பு அமைந்துள்ளது. சூழலுக்கு உகந்த அதே நேரத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற இது போன்ற பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
வீட்டின் வெளிப்புற தோற்றத்துக்கான எலிவேஷன் சுவர், பால்கனி, மாடிப்படி தடுப்பு சுவர் போன்ற இடங்களில் டெரகோட்டா ஜாலிகளை பயன்படுத்தலாம், சிமென்ட் கலவை பயன்படுத்தி இவற்றை சுவருடன் இணைக்கலாம், அதே நேரம், வண்ணம் அடிக்கும் செலவு மிச்சமாகிறது.

