/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பெண்களின் சொத்துரிமையை மீண்டும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
/
பெண்களின் சொத்துரிமையை மீண்டும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
பெண்களின் சொத்துரிமையை மீண்டும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
பெண்களின் சொத்துரிமையை மீண்டும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
ADDED : ஜன 08, 2024 08:05 AM

திருமணமான பெண்கள் குடும்பத்தின் பரம்பரை சொத்து உள்பட அனைத்திலும் தங்களுக்கான பங்குரிமையை கேட்கலாம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதில் ஏற்கனவே இருந்த சில நடைமுறை வரையறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.நாட்டில் இந்து குடும்பங்களில் ஆண்களுக்கான சொத்துரிமை, பெண்களுக்கான சொத்துரிமை என்ற வேறுபாடு பல காலமாக இருந்து வருகிறது.
இருப்பினும், தமிழகத்தில் முதன்முதலாக பெண்களுக்கான சொத்துரிமையை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.இதன்படி, குறிப்பிட்ட கால வரையறைக்கு பின் திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தில், தந்தையின் சொத்தில் உரிமை கோரலாம் என்று அறிவிக்கப்பட்டது.இது நாட்டிற்கே முன்மாதிரியாக அமைந்தது.இத்தகைய சட்டம் இருந்தாலும், பல குடும்பங்களில் பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதில், தந்தையின் சுயசம்பாத்திய சொத்தில் மட்டுமே பெண்கள் உரிமை கோர முடியும் என்று கூறப்பட்டு வந்தது.இந்நிலையில், பரம்பரை சொத்திலும் பெண்கள் தங்களுக்கான உரிமையை கேட்க முடியும் என தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
குறிப்பாக, திருமணமான பெண்கள் தங்களுக்கான இந்த உரிமையை கேட்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இத்தீர்ப்பால் நாடு முழுதும் பெண்களுக்கான சொத்துரிமை தொடர்பாக குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இந்து குடும்ப வாரிசுரிமை சட்டத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட ரீதியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தான், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான பலன் மக்களுக்க கிடைக்கும்.
இது விஷயத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, அடுத்த சில மாதங்களில் பெண்களுக்கான சொத்துரிமை தொடர்பான புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தான் இதன் தாக்கம் என்ன என்பது வெளிப்படையாக தெரியவரும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.