தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ புதிய வீட்டுக்கு பதிகற்கள் அமைப்பதற்கான பட்ஜெட்டில் கவனிக்க!

 புதிய வீட்டுக்கு பதிகற்கள் அமைப்பதற்கான பட்ஜெட்டில் கவனிக்க!

 புதிய வீட்டுக்கு பதிகற்கள் அமைப்பதற்கான பட்ஜெட்டில் கவனிக்க!


ADDED : ஜூலை 04, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 07:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பு திய வீடு கட்டும் போது அதற்கான செலவுகள் ஒட்டுமொத்த அளவிலேயே கணக்கு பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு செலவாகும் என்பது குறித்த பொதுவான நிலையில் ஒரு மதிப்பீடு தெரிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இப்படி ஒட்டுமொத்த நிலையில் தெரிய வரும் தொகைகள் அடிப்படையில் பட்ஜெட் போடுவதால் முழுமையான பயன் இல்லை. கட்டுமான பணியில் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன செலவுகள் ஏற்படும் என்பதை தெளிவாக பிரித்து அதற்கான செலவுகளை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு விரிவான முறையில் செலவுகளை பட்டியலிடும் போது தான் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன வேலைகள் நடக்க உள்ளது என்பதும், அதற்கான செலவுகள் குறித்த விபரங்கள் உரிமையாளருக்கு தெரியவரும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இந்த வகையில் வீடு கட்டும் போது, அதில் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய வடிவமைப்புகளில் பதிகற்கள் இருக்க வேண்டும் என, உரிமையாளர்கள் விரும்புகின்றனர். பொதுவாக கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தில் பதிகற்கள் அமைத்து தருகிறோம் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் கட்டுமான பொறியாளர்கள் தங்களுக்கு ஏற்ற விலையில் சாதாரண வடிவமைப்பு பதிகற்களை அமைத்துவிடுவது வாடிக்கையாக உள்ளது. உரிமையாளர்கள் தலையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து கூடுதல் செலவை ஏற்பதாக கூறினால் மட்டுமே பணிகள் முறையாக முடிக்கப்படும்.

உதாரணமாக, 1,000 சதுரடி பரப்பளவு வீடு கட்டுவதாக இருந்தால், தற்போதைய நிலவரப்படி, ஒரு கல், 50 ரூபாய் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், அடிப்படை பொருள் வாங்குவதற்கு மட்டும், 52,000 ரூபாய் வரை செலவாகும். இதற்கு அடுத்தபடியாக, பதிகற்களை ஒட்டும் பொருட்கள் வாங்குவது என்ற வகையில், 18,000 ரூபாய் வரை செலவாகும்.

வழக்கமான நபர்களை தவிர்த்து பதிகற்கள் ஒட்டுவதற்கான பணியாளர்களை பயன்படுத்தும் போது சதுரடி அடிப்படையில் அவர்களுக்கான கூலி முடிவு செய்யப்படும். இந்த வகையில், 1,000 சதுரடிக்கு பதிகற்களை முறையாக ஒட்டி கொடுப்பதற்கு, 40,000 ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும், அடிப்படை பொருட்கள், பணியாளர் கூலி, இணைப்பு பொருட்கள் ஆகியவற்றுக்கான செலவுகளை தெளிவாக பட்ஜெட்டில் குறிப்பிட வேண்டும். அப்போது தான் உரிமையாளர்களுக்கு கட்டுமான பணிக்கான செலவுகள் குறித்த புரிதல் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

கட்டுமான பொறியாளர்கள் தங்களுக்கு ஏற்ற விலையில் சாதாரண வடிவமைப்பு பதிகற்களை அமைத்துவிடுவது வாடிக்கை, உரிமையாளர்கள் தலையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து கூடுதல் செலவை ஏற்பதாக கூறினால் மட்டுமே பணிகள் முறையாக முடிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us