sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ பிழையான பட்டாவை பயன்படுத்தி சொத்து வாங்கும் போது கவனிக்க…

 பிழையான பட்டாவை பயன்படுத்தி சொத்து வாங்கும் போது கவனிக்க…

 பிழையான பட்டாவை பயன்படுத்தி சொத்து வாங்கும் போது கவனிக்க…


ADDED : பிப் 07, 2026 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதன் உரிமையாளரிடம் முறையான பட்டா உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். அதுவும் அந்த பட்டா அவர் பெயரில், முறையாக மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது அவசியம்.

ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அதன் உரிமையாளர் பெயரில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரம் இருக்க வேண்டும். அந்த பத்திரம் தொடர்பான வில்லங்க சான்று விபரங்கள் சரியாக இருப்பது அவசியம்.

இதில் அந்த பத்திரத்தில் சொத்து விபரங்கள், போன்ற அடிப்படை விபரங்களில் எவ்வித பிழையும் இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டியது அவசியம். இதே போன்று, உரிமையாளர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருப்பது அவசியம்

பெரும்பாலான இடங்களில், சொத்துக்கு பட்டா இருக்கும், ஆனால், அது தற்போதைய உரிமையாளர் பெயரில் இருக்காது. அவருக்கு முன் அந்த சொத்தை வைத்திருந்தவர் பெயரில் பட்டா இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டிஉள்ளது.

சொத்து பட்டா இருந்தால் போதும், அது யார் பெயரில் இருந்தால் என்ன, பத்திரப்பதிவுக்கு பின் நம் பெயருக்கு மாற்றப்படும் என்று நினைக்காதீர். பழைய உரிமையாளர்கள் பெயரில் பட்டா இருப்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவதில்லை.

ஆனால், அந்த பட்டாவில் உரிமையாளர் பெயர், நில அளவு போன்ற விபரங்களில் எவ்வித எழுத்து பிழையும் இருக்க கூடாது. அவ்வாறு பிழை இருந்தால், புதிதாக அந்த சொத்தை வாங்கியவர் பெயருக்கு மாற்றும் போது தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும்.

பழைய உரிமையாளர் பெயரில் ஒரிரு எழுத்துகள் பிழையாக இருந்தாலும் அடுத்தவர் பெயருக்கு மாற்றும் போது பிரச்னை ஏற்படும். அதே நேரம் அந்த பட்டாவில் பிழைகளை சரி செய்து கொடுக்குமாறு தற்போதைய உரிமையாளரிடம் கேட்பதற்கு வழி இருக்கிறது.

ஆனால், தற்போதைய நிலையில், பட்டா போன்ற ஆவணங்களில் பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறை உரிய கவனம் செலுத்துவதில்லை. பட்டாவில் பிழைகளை சரிய செய்ய கோரி வரும் விண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுப்பதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர்.

எனவே, பழைய பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது, அதில் பிழை இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். இது விஷயத்தில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

பட்டாவில் பழைய உரிமையாளர் பெயரில், ஒரிரு எழுத்துகள் பிழையாக இருந்தாலும் அடுத்தவர் பெயருக்கு மாற்றும் போது பிரச்னை ஏற்படும், பிழைகளை சரி செய்து கொடுக்குமாறு தற்போதைய உரிமையாளரிடம் கேட்பதற்கு வழி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us