/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டட பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படும் பல வகை மின் கட்டணம்
/
கட்டட பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படும் பல வகை மின் கட்டணம்
கட்டட பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படும் பல வகை மின் கட்டணம்
கட்டட பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படும் பல வகை மின் கட்டணம்
ADDED : நவ 10, 2024 01:30 PM

குடியிருப்பு, வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இது, 240 வோல்ட் மின்னழுத்தம் மற்றும், 50 ஹெர்ட்ஸ் அலை அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டமாகும். அவை பழுதாகாமல் பாதுகாப்பாக இயங்க, சரியான மின்னழுத்தமும், அலை அதிர்வெண்ணும் கொண்டதான மின்சாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து, பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
மின்னழுத்தம், 230 வோல்ட்க்கு குறையாமலும், 250 வோல்ட்டுக்கு மிகாமலும் இருக்கும் மின்சாரம் மிக அவசியம். தேவைப்படின், மின்னழுத்த நிலைப்படுத்தி சாதனம் பொருத்தலாம். மின் தேவையை பூர்த்தி செய்ய சோலார் பலகைகள், மின் காற்றாலை, ஜெனரேட்டர் அல்லது அரசின் மின் வினியோகத்தை பயன்படுத்தலாம்.
இவற்றில் பெரும்பான்மையானோர் அரசின் மின் வினியோகத்தை பெறுகின்றனர். இது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டே(TNERC 23-24) வினியோகிக்கப்படுகிறது. அரசின் மின் இணைப்பை பெற, tangedco.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்; கட்டணமும் அதில் செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்ல வேண்டியதில்லை. கட்டட பயன்பாட்டின் அடிப்படையில் ஆணையம் பல வகை கட்டணங்களை விதிக்கின்றன. உதாரணத்துக்கு, தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு I-A கட்டண வீதம் விதிக்கப்படுகிறது.
வணிக கட்டடங்களுக்கு, V கட்டண வீதம் வசூலிக்கப்படுகிறது. குடியிருப்பு நோக்கங்களான விளக்கு, விசிறி, குளிர் சாதனங்கள், டிவி, பிற வீட்டு உபயோக சாதனங்கள் ஆகியவற்றுக்காக மட்டும் கட்டணம் I-A பொருந்தும்.
ஒரு குடியிருப்பு அலகு என்பது வாழ்வதற்கு மற்றும் சமைக்க தனி வசதியுடனான குடியிருப்பு நோக்கம் கொண்டதாகும். இது கட்டடத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கலாம். ஒரு நிரந்தரமான மின் பிரிப்பு கொண்ட அலகுக்கு, ஒரு மின் இணைப்பே அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு இருப்பின், ஒரு இணைப்புக்கே இந்த கட்டணத்தின்கீழ் தகுதி உண்டு. மற்ற இணைப்புகள் கட்டண விதிகள் I-Dன் கீழ் வசூலிக்கப்படும். சுயாதீன வீட்டு அலகு என்பது கள ஆய்வு வாயிலாக உறுதிப்படுத்தப்படும்.
ஆய்வு அதிகாரிகளுக்கு தெளிவில்லை என்றால் வாடகை ஒப்பந்தம் கேட்கப்படும். ஒரே குடும்ப உறுப்பினர்கள் என்றால் ரேஷன் கார்டு கேட்கப்படலாம். ஒரு சுயாதீன வீட்டு அலகு மாணவர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் கூட்டு தங்குமிடமாக இருந்தால், ஆறு நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.