தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?

 சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?

 சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?


ADDED : ஏப் 25, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். இவ்வாறு பத்திரங்களை பதிவு செய்ய வேண்டுமானால், சார்-பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் மக்களின் விருப்பம், வசதி போன்ற விஷயங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லாத நிலை இருந்து வந்தது. இதில் முதல்படியாக, மக்கள் தங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்காமல், வார விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு செய்து கொள்ளும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.

இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அடிப் படையில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் நடைமுறைகளை பதிவுத்துறை முன்னெடுத்துள்ளது. இதன்படி, ஸ்டார் 3.0 சாப்ட்வேரின் முதல்பகுதி சமீபத்தில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய சாப்ட்வேர் வந்ததால், பொது மக்கள் எங்கிருந்தும், எப்போதும் பத்திரங்களை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் சார்- பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வராமல் தங் களுக்கான பத்திரப்பதிவை முடிக்க இதில் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் அதற்கான பத்திரங்களை பதிய சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டாம். அத்திட்டத்தை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனத்தின் அலுவல கத்தில் இருந்தபடியே பத்திரங்களை எளிதாக பதிவு செய்யலாம்.

இதில் மிக முக்கியமான முன்னேற்றமாக, வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரத்தை தயாரிக்க ஆவண எழுத்தர்களை அணுகாமல், தாங்களே தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பதிவுத்துறை இணை ய தளத்தில் மாதிரி பத்திரங்கள் இருந்தன.

ஆனால், தற்போது, யாரிடம் இருந்து யார் எந்த சொத்தை வாங்குகிறார்கள், சொத்து அமைந்துள்ள இடத்தின் விபரம் போன்ற தகவல்கள் இருந்தால், போதும் மக்களே பத்திரத்தை ஆன்லைன் முறையில் தயாரிக்க வழிகாட்டப்படுகிறது. மிக எளிமையாக, நான்கு நிலைகளில் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெரிய அளவில் சிக்கல் இல்லாத பத்திரங்களை தயாரிக்க பொது மக்கள் ஆவண எழுத்தர்களை நாடுவதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. இதே போன்று, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட விபரங்கள் தேடுவதற்கான நடைமுறைகளும் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்க நினைப்போர் அதற்கான நகல் பத்திரத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் தற்போது எளிதாகி உள்ளது. தேவையான பத்திரம் குறித்த விபரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்தினால் போதும் அடுத்த சில நிமிடங்களில் நகல் பத்திரம் வந்துவிடும்.

இதற்கு அடுத்தபடியாக மேலும் பல்வேறு மாற்றங்கள் வரவுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் அதற்கான பத்திரங்களை பதிய சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தே பதிவு பணிகளை முடிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us