தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?


ADDED : ஜூன் 13, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் மின்சார உற்பத்திக்கு பல்வேறு மாற்று வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், மரபு சார்ந்த முறையில் எளிதாக மின்சாரம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வலு பெற்று வருகிறது .

இந்த வகையியில், வீடுகளில் மொட்டை மாடி உட்பட பல்வேறு காலியிடங்களில் சோலார் பேனல்களை வைத்து சூரிய சக்தி வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதை உக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயம். நகர், ஊரமைப்பு சட்ட விதிகளில் இதற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

சோலார் வசதிகள் இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் சோலார் வசதிகள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்க முன்வந்துள்ளது.

இருப்பினும், வீடுகளில் சோலார் மின்சார கட்டமைப்புகளை அமைப்பதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதில் பகல் நேரத்தில் தான் சோலார் பேனல்கள் வாயிலா க மின்சாரம் உற்பத்தியாகும் என்றால், அதை உடனடியாக பயன்படுத்த வாய்ப்பு குறைவு.

பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இரவு நேரங்களில் தான் வளக்குகள் எரிய மின்சாரம் தேவைப்படும். ஆனால், பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இருப்பு வைத்து, இரவில் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான மி ன்சார சேமிப்பு பேட்டரி வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வா று சே மி ப்பு வசதிகள் செய்ய ஆகும் செலவை தவிர்க்க நினைப்பவர்கள், பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அரசின் மின்சார வாரிய தொகுப்புக்கு கொடுத்து விடுவது. இரவில் மின்சார வாரிய வழக்கமான இணைப்பு வாயிலாக மின்சாரத்தை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இதில், ஒரு மாதத்தின் இறுதியில், நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படும் போது, தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த மின்சாரம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை உங்கள் மின்சார கட்டணத்தில் கழிக்கப்படும்.

இவ்வாறு செய்வதால், வீடுகளுக்கான மின்சார கட்டண செலவு பாதியாக குறைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இவ்வாறு செய்வதற்கு மின்சார வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us