sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

 பக்கவாட்டு காலியிடம் விடாமல் வீடு கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள்?

/

 பக்கவாட்டு காலியிடம் விடாமல் வீடு கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள்?

 பக்கவாட்டு காலியிடம் விடாமல் வீடு கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள்?

 பக்கவாட்டு காலியிடம் விடாமல் வீடு கட்டுவோர் சந்திக்கும் பிரச்னைகள்?


ADDED : டிச 06, 2025 08:16 AM

Google News

ADDED : டிச 06, 2025 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்த ஊரைவிட்டு வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக நகரப்பகுதிகளில் குடியேறிய மக்கள், இங்கு எப்படியாவது சொந்தவீடு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் பலரும் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இதில், நகரங்களில் நிலவும் விலைவாசி காரணமாக, பெரிய பரப்பளவுக்கு நிலம் வாங்கி வீடு கட்டுவது குறைந்த வருவாய் பிரிவினரால் சாத்தியமில்லை. எனவே, குறைந்த பரப்பளவு மனைகளை வாங்கி அதில் பட்ஜெட்டுக்குள் வீடு கட்டி குடியேற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறைந்த பரப்பளவு நிலம், குறைந்த பட்ஜெட் போன்ற பிரச்னைகளுக்கு நடுவில் வீடு கட்டினாலும், குறிப்பிட்ட சில விஷயங்களில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நகர், ஊரமைப்பு சட்டம் மற்றும் பொது கட்டட விதிகளின் அடிப்படையில் ஒரு நிலத்தின் மொத்த பரப்பளவில் எந்த அளவுக்கு கட்டடம் கட்டலாம் என்ற வரையறை உள்ளது.

அதில் குறிப்பாக, ஒரு கட்டடம் கட்டும் போது பக்கவாட்டு பகுதியில் காலியிடம் விட வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சாதாரண வீடுகளில், பக்கவாட்டு காலியிடம், குறைந்தபட்சம் 2 அடி அகலத்துக்கு விட வேண்டும் என்று உள்ளது.

ஆனால், பெரும்பாலான மக்கள் குறைந்த பரப்பளவு மனையில் வீடு கட்டும் போது, பக்கவாட்டு காலியிடம் விட மறந்துவிடுகின்றனர். இதனால், கட்டடத்தின் வெளிப்புறத்தில் வழக்கமான பூச்சு வேலையை கூட அவர்களால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

கட்டடம் கட்டும் போது இடப்பற்றாக்குறையை காரணமாக வைத்து, பக்கவாட்டு காலியிடம் விடுவதை தவிர்ப்பது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாகிவிடும். வெளிப்புற பூச்சு வேலை மட்டுமல்லாது, பிளம்பிங் இணைப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும்.

இத்துடன் கட்டடத்தில் நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும் நிலையில் அதை சரி செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்படும். தரை தளத்துடன் முதல் தளம் கட்டுவதானால், பக்கவாட்டு காலியிடம் விடலாம் என்றும், தரை தளம் மட்டும் கட்டும் நிலையில் உட்புற பரப்பளவு பாதிக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.

இதனால் தான் நகரமைப்பு சட்டத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க தகுதி நிலை என, 840 சதுர அடி மனை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்படி, 840 சதுர அடி மனையை வாங்கினால், விதிகளுக்கு உட்பட்டு ஓரளவுக்கு பக்கவாட்டு காலியிடம் விட முடியும்.

பணம் கொடுத்து வாங்கிய நிலம் என்பதற்காக அதன் ஒவ்வொரு சதுர அடியையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல. நீங்கள் கட்டும் கட்டடம் பாதுகாப்பானதாக, பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

சட்ட விதிகளின்படி, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க தகுதி நிலை என, 840 சதுர அடி மனை இருக்க வேண்டும், இதை கருத்தில் வைத்து தொடர் நடவடிக்கைகள் எடுத்தால், பக்கவாட்டு காலியிட பிரச்னைகளை தவிர்க்கலாம்.






      Dinamalar
      Follow us