தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?

நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?

நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?


ADDED : ஜூலை 18, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான சந்தை மதிப்பு நிலவரம் என்ன என்று தான் பெரும்பாலான மக்கள் பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் உரிமையாளர் சொல்லும் விலை சரியா என்று ஆராய்ந்து முடிவுகள் எடுக்கின்றனர்.

ஆனால், சொத்து மதிப்பு, அடிப்படையில் பேரம் பேசப்படும் விலையை பெரும்பாலான மக்கள் கிரையப் பத்திரத்தில் குறிப்பிடுவது இல்லை. சொத்துக்கள் குறித்து சர்வே எண் வாரியாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி மதிப்புகளையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு, பதிவுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி மதிப்புகளை புரிந்து கொள்வதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக வீடுகள் அமைந்துள்ள நிலங்களுக்கு குடியிருப்பு வகைப்பாட்டில் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

நீங்கள் வாங்கும் நிலம் வழிகாட்டி மதிப்புகளுக்கான தகவல் தொகுப்பில் எந்த வகைப்பாட்டில் வருகிறது என்று முதலில் பாருங்கள். அதில், சர்வே எண் அடிப்படையிலும், தெரு அடிப்படையிலும் மதிப்புகள் என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

இதில் சில சமயங்களில், சர்வே எண் அடிப்படையிலான மதிப்பு தான் சரியானது என்று, அதை அப்படியேபத்திரத்தில் மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், தெரு அடிப்படையில் பார்க்கும் போது, மதிப்பு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது என்பது பத்திரப்பதிவுக்கு செல்லும் போது தெரியவரும்.

எனவே, கிரையப்பத்திரம் தயாரிக்கும் போது, ஆவண எழுத்தருடன் ஆலோசித்து, எந்த மதிப்பு அதிகம் என்று பார்த்து அதை குறிப்பிடுவது நல்லது. இதில், அக்கம் பக்கத்து நிலங்கள் விவசாய வகைப்பாட்டில் இருக்கும் போது, அங்கு செயல்படுத்தப்படும் தனி மனை வாங்கும் போது வழிகாட்டி மதிப்பு ரீதியாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ள நிலம் என்றால், அதற்கு தனியாக குடியிருப்புக்கான மனை நிர்ணயித்து இருக்க வாய்ப்பு இல்லை. இத்தகைய சொத்துகளை வாங்கும் போது சம்ந்தப்பட்ட சார்-பதிவாளரை நேரில் சந்தித்து என்ன மதிப்பு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பெற வேண்டும்.

இது மட்டுமல்லாது, வீடுகள் அமைந்துள்ள பகுதியில் ஒரு கடை வைத்துள்ள ஒருவர் அதை விற்கும் போது அதற்கு என்ன மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது. இது போன்ற சூழலில், தனியாக மதிப்பு நிர்ணயிக்கும் நிலைக்கு செல்லாமல், சுற்றுப்புற குடியிருப்புகளுக்கான மதிப்புகளை கடைப்பிடிக்கலாம் என பதிவுத்துறை வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us