/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பொறியாளர் வீடு கட்டுவதால் என்ன நன்மை... கொத்தனாரிடம் ஒப்படைப்பதால் என்ன தீமை?
/
பொறியாளர் வீடு கட்டுவதால் என்ன நன்மை... கொத்தனாரிடம் ஒப்படைப்பதால் என்ன தீமை?
பொறியாளர் வீடு கட்டுவதால் என்ன நன்மை... கொத்தனாரிடம் ஒப்படைப்பதால் என்ன தீமை?
பொறியாளர் வீடு கட்டுவதால் என்ன நன்மை... கொத்தனாரிடம் ஒப்படைப்பதால் என்ன தீமை?
ADDED : ஏப் 26, 2025 12:21 AM

இ ன்றைய காலகட்டத்தில் பொது மக்கள் பலர், வீடு கட்டுமான பணிகளை தொழில்நுட்ப அறிவு இல்லாத ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. அவர்களிடம் பொறியியல் அறிவு இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.
'காட்சியா' உறுப்பினர் சரவணகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
n மேஸ்திரி போன்ற ஒப்பந்ததாரர்கள் மண் சோதனை, நீர்நிலை, நிலச்சரிவு அபாயம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் பணியைத் தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு சிவில் இன்ஜி., தள ஆய்வை முறையாக செய்து திட்டமிடுகிறார்.
n கட்டமைப்பு பலம், சுமை வினியோகம், கட்டட அனுமதி போன்ற முக்கிய விஷயங்களில் ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் தோல்வி அடைகிறார்கள். ஆனால், பொறியாளர் அறிவியல் அடிப்படையில் கட்டடத்தை பாதுகாப்பாக வடிவமைக்கிறார்.
n தரமற்ற பொருட்கள், தவறான எலக்ட்ரிக்கல் அமைப்புகள், தவறான பிளம்பிங் அமைப்புகள், நீர்த் தணிப்பு பிரச்னைகள் போன்றவை ஒப்பந்ததாரர்களின் அனுபவமின்மையால் ஏற்படுகின்றன. பொறியாளர்கள் தரமான பொருட்கள், பாதுகாப்பான திட்டமிடல் மற்றும் சட்டம்-ஒழுங்குடன் பணியை நடத்துகிறார்கள்.
n பொறியாளர் என்றால் செலவு அதிகம் என்ற தவறான எண்ணம், பல வாடிக்கையாளர்களிடம் உள்ளது. இதனால் நேரடியாக கொத்தனார் அல்லது ஒப்பந்ததாரரை தேடுகிறார்கள். இதனால், பல பிரச்னைகளுக்கும், வருங்காலத்தில் ஏற்படவுள்ள கூடுதல் செலவுக்கும் இடம் கொடுக்கிறார்கள்.
n சரியான முறையில் திட்டமிடப்பட்ட கட்டடம் நீடித்ததாக இருக்கும்; பாதுகாப்பானதாக இருக்கும். எதிர்காலத்தில் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். பொறியாளரிடம் முதலீடு செய்வது, பாதுகாப்பான முதலீடு என்பதை, மக்கள் புரிந்து கொள்வது அவசியம். ஒரு வீடு என்பது வாழ்நாள் சேமிப்பின் முக்கிய நிமிடம். அந்த வீட்டை எங்கே கட்டுகிறோம் என்பதையும், யாரிடம் கட்டுகிறோம் என்பதையும், புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்களை மட்டுமே நம்பாமல், தகுதியான சிவில் இன்ஜி., வழிகாட்டலுடன் திட்டமிட்டு கட்டுவது நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார்.