sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ கட்டுமான பணியில் எப்போது அதிக செலவு ஏற்படும்? 

 கட்டுமான பணியில் எப்போது அதிக செலவு ஏற்படும்? 

 கட்டுமான பணியில் எப்போது அதிக செலவு ஏற்படும்? 


ADDED : மே 16, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 06:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக வீடு கட்டுவது என்று முடிவு எடுத்த நிலையில், அதற்கான செலவுகளை பட்ஜெட் போட வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள கட்டுமான பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரரை அணுகினால், உத்தேச பட்ஜெட் விபரங்கள் கிடைக்கும்.

இதில் ஒரு வீட்டுக்கான கட்டுமான பணியில் எந்த நிலையில் எவ்வளவு செலவு ஏற்படும் என்பதை தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள், கட்டடத்தின் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகிய பணிகளுக்கு தான் அதிக செலவு ஏற்படும் என்று நினைக்கின்றனர்.

ஆனால், உண்மையில் யாரும் எதிர்பார்த்திராத நிலைகளில் திடீரென செலவுகள் அதிகமாவது வீட்டு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. குறிப்பாக, கட்டடத்தின் பிரதான கான்கிரீட் அமைப்புகளுக்கான பணிகள் முடிந்த நிலையில், இனி இருப்பது சிறிய அளவிலான பணிகள் தான் என்று மக்கள் நினைக்கின்றனர்.

இந்த வகையில் கட்டடத்தின் சுவர்கள் கட்டுமானம், பூச்சு வேலைக்கு பின் பெரிதாக செலவாகாது என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், கட்டடத்துக்கான பட்ஜெட்டில் பெரும்பகுதியை அடிப்படை அமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கு செலவிடுகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு கட்டடத்திலும், பூச்சு வேலை முடிந்த பின், வண்ணம் அடிப்பது, ஒயரிங் வேலை முடிப்பது, கதவு, ஜன்னல் அமைப்பது, உள் அலங்காரம் போன்ற பணிகளுக்கு தான் அதிகம் செலவாகிறது என்று கூறுகின்றனர். வீட்டுக்கான கட்டுமான பணியில் தரை அமைப்பதில் என்ன வகை பதிகற்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் செலவுக் துவங்கும்.

பொதுவாக, குறைந்த விலை பதிகற்களை மக்கள் விரும்பாததால் தரமான பொருள் என்று அதிக விலைக்கு பதிகற்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. குறிப்பாக, உயர்ரக பதிகற் களை நீங்கள் தேர்வு செய்யும் நிலையில், அது ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்ட பட்ஜெட் வரன்முறைக்கு அப்பால் சென்றுவிடும்.

இதே போன்று சுவரில் வண்ணம் அடிக்கும் பணியிலும், விருப்பமான வண்ணங்கள் என்பதுடன் நிற்காமல், இதில் கூடுதல் சிறப்பு அம்சங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் விலையை கொடுக்க வேண்டும்.

இது மட்டுமல்லாது, கட்டடத்தில் உள் அலங்காரம் செய்ய வேண்டும் என்று இறங்கினால் அதற்கான செலவு வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் செலவை குறைப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், அதிக விலையில் உள்ள பொருட்கள் மக்களை ஈர்ப்பதாக அமைந் துள் ளது.

இந்த விஷயங்களின் அடிப்படையில் புதிய வீட்டுக்கான பட்ஜெட் போடும் போது எங்கு எப்படி செலவு அதிகரிக்கும் என்பதை புரிந்து செயல் படுங்கள். இறுதி நிலையில் ஏற்படும் கூடுதல் செலவை முன்கூட்டியே திட்ட மிட்டால் குறித்த காலத்தில் பணிகளை முடிக்க முடியும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

சுவரில் வண்ணம் அடிக்கும் பணியிலும், விருப்பமான வண்ணங்கள் என்பதுடன் நிற்காமல், இதில் கூடுதல் சிறப்பு அம்சங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us