தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ மொட்டை மாடி தண்ணீர் தொட்டியால் கட்டடத்துக்கு பிரச்னை வராமல் இருக்குமா?

 மொட்டை மாடி தண்ணீர் தொட்டியால் கட்டடத்துக்கு பிரச்னை வராமல் இருக்குமா?

 மொட்டை மாடி தண்ணீர் தொட்டியால் கட்டடத்துக்கு பிரச்னை வராமல் இருக்குமா?


ADDED : பிப் 07, 2026 08:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக வீ டு கட்டும் போது அதில் மொட்டை மாடியில் மேல் நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மொட்டை மாடியில் ஓரு ஓரத்தில் இடம் ஒதுக்கி, பாதுகாப்பான முறையில் கான் கிரீட்டால் தொட்டி கட்டும் பழக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

சமீப காலமாக புதிய வீடு கட்டுவோர் அதன் மேல் தளத்தில் ரெடிமேட் தண்ணீர் தொட்டிகளை வைப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். மக்களின் தேவையை புரிந்து கொண்ட உற்பத்தியாளர்கள் பல்வேறு அளவுகளில் மேல் நிலை தண்ணீர் தொட்டிகளை தயாரித்து கொடுக்கின்றனர்.

தற்போதைய நிலையில், பிவிசி பயன்படுத்தி, 500 லிட்டர், 750 லிட்டர், 1,000 லிட்டர் என்ற அளவுகளில் தண்ணீர் தொட்டி கள் விற்பனைக்கு வந்துள்ளன. தயாரிப்பு நிறுவனங்கள், தரம், கொள்ளளவு அடிப் படையில் இவற்றுக்கான விலை வேறு படுகிறது.

இது போன்ற ரெடிமேட் தொட்டிகளை வாங்கி, மொட்டை மாடியில் கட்டடத்தின் மேல் தள ஸ்லாப் மீது அப்படியே வைத்துவிடலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு மேல் தள ஸ்லாப் மீது தண்ணீர் தொட்டியை நேரடியாக வைப்பதால் கட்டடத்தின் உறுதி பாதிக்கப்படும்.

மேல் நிலை தண்ணீர் தொட்டியின் எடை அதிக மாகும் போது அது மேல் தள ஸ்லாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மேல் தள ஸ்லாப்பில் உள்ள கம்பிகள், உடையும் நிலை ஏற்படக்கூடும் என்பதால், கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை அது கடுமையாக பாதிக்கும்.

எனவே, மொட்டை மாடியில் ரெடிமேட் தண்ணீர் தொட்டி வைப்பதனால், அதற்கான இடவசதியை முறையாக ஏற்படுத்த வேண்டும். மொட்டை மாடியில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அங்கு நிலத்தில் இருந்து வரும் ஏதாவது ஒரு துாணை தேர்வு செய்து அதன் மேல் தண்ணீர் தொட்டிக்கான ஸ்லாப் அமைப்பது அவசியம்.

இதன் மேல் தண்ணீர் தொட்டியை அமைப்பதால் அதன் தாக்கம் மேல் தள கான்கிரீட் ஸ்லாப் மீது நேரடியாக இறங்குவதை தடுக்கலாம். இது விஷயத்தில் தண்ணீர் விநியோகத்திலும் பிரச்னை ஏற்படுவதை தடுக்க வழி கிடைக்கும்.

கட்டடங்களில் மேல் தளத்தில் ரெடிமேட் தண்ணீர் தொட்டி அமைக்கும் போது தொட்டியின் மொத்த எடை என்ன என்பதை அறிந்து அதை தாங்குவதற்கான தளத்தை அமைக்க வேண்டும். இந்த அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து செயல்பட்டால் தண்ணீர் தொட்டியால் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

மொட்டை மாடியில் கான்கிரீட் தளத்தில் நேரடியாக ரெடிமேட் தண்ணீர் தொட்டியை அமைக்காமல், அதில் துாண் அமைத்து அதன் மேல் ஒரு ஸ்லாப் வைத்து தண்ணீர் தொட்டியை அமைப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us