sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

வீடு பராமரிப்பு

/

பெட்ரூமில் வளர்க்க வேண்டிய 5 செடிகள்..!

/

பெட்ரூமில் வளர்க்க வேண்டிய 5 செடிகள்..!

பெட்ரூமில் வளர்க்க வேண்டிய 5 செடிகள்..!

பெட்ரூமில் வளர்க்க வேண்டிய 5 செடிகள்..!


UPDATED : ஜூலை 31, 2023 07:32 PM

ADDED : ஜூலை 31, 2023 07:30 PM

Google News

UPDATED : ஜூலை 31, 2023 07:32 PM ADDED : ஜூலை 31, 2023 07:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெட்ரூமில் செடிகளை வளர்ப்பது, உங்கள் அறையின் சூழலை மாற்றுவதுடன், ஆரோக்கியமான தூக்கத்தை மேம்படுத்த உதவும். பசுமையான தாவரங்கள், செடிகளுக்கு மத்தியில் இருக்கும் போது சிறப்பாக உணர்வதுடன், வேலையில் அதிக திறன், ஞாபகத்திறனுடன், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்குமென ஆய்வு முடிவுகளில் கூறப்படுகிறது.

1. மல்லிச்செடி :

Image 1148324
மல்லிச்செடியை பெட்ரூமில் வளர்க்கலாம். மல்லிகை பூவின் வாசம் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், நல்ல தூக்கத்தை தூண்டும். மேலும் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், விழிப்புணர்வை மேம்படுத்த

உதவும். உணர்ச்சிகளை அதிகரிக்கவும் உதவும்.

2. ஸ்னேக் பிளான்ட் :

Image 1148325
ஸ்னேக் பிளான்ட் இயற்கையான காற்று சுத்திகரிப்பான செயல்படுகிறது. இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதால் உங்களால் நன்றாக தூங்க இயலும். நச்சு நீக்கியாக செயல்படுகிறது. அலர்ஜியால் அவதிப்படுவோர், ஸ்னேக் பிளான்ட் வளர்க்கலாம்.

3. லாவண்டர் செடி :

Image 1148326
லாவண்டர் பூவின் வாசம், உங்களை பெட்ரூமில் மிகவும் ரிலாக்ஸாக உணர வைக்கும். மன அழுத்தத்தின் அளவை குறைக்க உதவும். லாவண்டர் செடி வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் நன்றாக வளரும். வாசம் மட்டுமின்றி லாவண்டர் ஆயிலை பயன்படுத்துவதால், ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பின் வேகம் குறைவது ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

4. பீஸ் லில்லி :

Image 1148327
மிகவும் பிரபலமான பீஸ் லில்லி செடி, பெட்ரூமில் உள்ள அறை காற்றினை சுத்திகரிக்கும். இதனால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க உதவுகிறது. அதிகம் பாரமரிப்பு தேவைப்படாத அழகான வெள்ளை லில்லி பூக்கள் வளர குறைந்த சூரிய ஒளியும், நீரும் மட்டும் போதுமானது.

5. கார்டேனியா :

Image 1148328
கார்டினியா மலர்கள் ஒரு புதிய வாசனையை வெளியிடும். இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, தூக்கத்தைத் தூண்டுகிறது. தூக்க மாத்திரைகளுக்கு கார்டேனியா பூக்கள் சிறந்த இயற்கை மாற்று என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மையால் அவதிப்படுவோர் பெட்ரூமில் கார்டேனியா செடியை வளர்க்கலாம்.






      Dinamalar
      Follow us