/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
கனவு இல்லத்தை கரையான்களிடமிருத்து காப்பது அவசியம்..!
/
கனவு இல்லத்தை கரையான்களிடமிருத்து காப்பது அவசியம்..!
கனவு இல்லத்தை கரையான்களிடமிருத்து காப்பது அவசியம்..!
கனவு இல்லத்தை கரையான்களிடமிருத்து காப்பது அவசியம்..!
ADDED : செப் 02, 2023 12:32 PM

சொந்த வீடு என்பது நம் அனைவரின் கனவாகும். கடனை வாங்கியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என வாடகை வீட்டில் உள்ளவர்களின் முதல் ஆசையாக உள்ளது. இப்படி ஆசை ஆசையாய் கட்டும் வீட்டை அஸ்வதிவாரத்தில் இருந்து கவனிக்க வேண்டும். இல்லையென்றால் வீடு முழுமை அடையும் போது பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பொருட்கள் வாங்குவதில் இருந்து அதனை பயன்படுத்தும் விதம் என அனைத்தும் ஒரு வீட்டிற்கு முக்கியமானதாகும்.
இப்படி வீட்டிற்கு மிக முக்கியமான பொருட்களில் ஒன்று கதவு, ஜன்னல் ஆகும். அதிக விலைக் கொடுத்து வாங்கும் கதவு, ஜன்னல் வீட்டில் பொருத்தும் போது, பலரும் அதை பாதுகாப்பாகவும், கரையான், பூஞ்சை தொற்றுகளில் இருந்து காக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். இதனால் வீட்டின் ஆயுட்காலம் வரை வரவேண்டிய கதவு, ஜன்னல் குறிப்பிட்ட சில ஆண்டுகளிலே வீணாகி விடுகிறது.
ஆகையால் கதவு, ஜன்னல் அமைக்கும் போது, பின்வரும் குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.
புதிதாக நாம் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது, பூமியில் பூச்சி கொல்லி மருந்து தெளிப்பது அவசியமாகும். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் உள்ள பூச்சிகள் மற்றும் கரையான்கள் அழிந்து விடும்.
மரங்களை ஆசாரியிடம் கொடுத்து கதவு, ஜன்னலாக தயார் செய்த பிறகு, அவற்றிற்கு உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் செல் ஆயில் அல்லது பூச்சி மருந்து தெளிப்பதன் மூலம் கரையான் அரிப்பில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
வீட்டில் புதிதாக கதவு மற்றும் ஜன்னல் பிரேம் எங்கு பொறுத்தப்பட இருக்கிறதோ அந்த சுவற்றில் துளையிட்டு பூச்சி மருத்து செலுத்தலாம்.
வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல், கதவு தன்மையை பரிசோதனை செய்யலாம். இதன்மூலம் கரையான் அரிப்பு இருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கலாம்.