/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
மாடி தோட்டத்தில் விளைச்சல் இல்லையா?: தீர்வு தரும் இயற்கை கரைசல்...!
/
மாடி தோட்டத்தில் விளைச்சல் இல்லையா?: தீர்வு தரும் இயற்கை கரைசல்...!
மாடி தோட்டத்தில் விளைச்சல் இல்லையா?: தீர்வு தரும் இயற்கை கரைசல்...!
மாடி தோட்டத்தில் விளைச்சல் இல்லையா?: தீர்வு தரும் இயற்கை கரைசல்...!
ADDED : செப் 29, 2023 05:16 PM

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மக்கள் இயற்கை சார்ந்த பொருட்களை தேர்ந்தெடுத்து உண்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக இயற்கை முறையில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவற்றை வாங்க கவனம் செலுத்தியுள்ள நிலையில் அதற்கான சந்தை குறைவாகவே உள்ளது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இயற்கை அங்காடிகள் இருந்தாலும், அவை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருப்பதில்லை.
தற்போது சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் நகரங்களில் மக்கள் மாடி தோட்டம், சிறிய பண்ணைகள் அமைத்து அதன் மூலம் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்களை உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு இயற்கை முறையில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துகளாக பஞ்சகாவ்யா, மீன் அமிலம், புண்ணாக்கு கரைசல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. இந்த வரிசையில் பயிர்களின் வளர்ச்சிக்கும், அதிக மகசூலுக்கும் கைக்கொடுக்கும் இளநீர்-மோர் கரைசலை வீட்டிலேயே செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மோர் - 5லிட்டர்
இளநீர் - 1லிட்டர்
தேங்காய் - 2
பழக்கழிவு சாறு - 500மி.லி
செய்முறை
ஒரு வாளியில் இளநீர், மோர், பழக்கழிவு சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து தேங்காயை உடைத்து துண்டுகளாக்கி அதை துணியில் கட்டி, கரைசலில் மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
ஏழு நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். அவ்வபோது தேங்காய் துண்டுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த கரைசலை 500மி.லி-1லிட்டர் வரை எடுத்து 10லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பயிர்கள் செழித்து வளர்வதோடு, பூக்கும் திறன் அதிகரித்து மகசூல் அதிகரிக்கும்.