/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
உங்கள் வீட்டுக் குழந்தை பாதுகாப்பாக உலகை ஆராய ஏற்ற வழிகள்..!
/
உங்கள் வீட்டுக் குழந்தை பாதுகாப்பாக உலகை ஆராய ஏற்ற வழிகள்..!
உங்கள் வீட்டுக் குழந்தை பாதுகாப்பாக உலகை ஆராய ஏற்ற வழிகள்..!
உங்கள் வீட்டுக் குழந்தை பாதுகாப்பாக உலகை ஆராய ஏற்ற வழிகள்..!
UPDATED : செப் 09, 2023 07:33 PM
ADDED : செப் 09, 2023 07:32 PM

பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குள் தலை நின்று, கவிழ்ந்து படுக்கும். எட்டு மாதத்தில் மெதுமெதுவாக எழுந்து நிற்கத் தொடங்கும். 9-10 மாதங்களில் நடக்கத் தொடங்கும். ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் நடை அதிகரிக்கும். ஒன்றரை முதல் இரண்டு வயதுக் குழந்தை, நடந்து சென்று வீட்டில் உள்ள பொருட்களை ஆராயும். குழந்தைகள் இவ்வாறு நடந்து அதன் கண்ணில்படும் பொருட்களை எப்படிப் பயன்படுத்தலாம் என சிந்திக்கும்.
குழந்தைகளின் மூளை செயல்திறன் அதிகரிக்கும்போது அவர்களது தேடலும் அதிகரிக்கும். தேடல் மற்றும் ஆராய்ச்சி என்பது குழந்தைப் பருவத்தின் ஓர் முக்கிய அம்சம். நாம் அனைவருமே இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் கண்டு, தொட்டுப்பார்த்து உணர்ந்து இருப்போம். குழந்தைகளுக்கு சீறும் பாம்பு, மின் விசிறி, உயரமான கட்டடத்தின் முகடு என எதுவுமே தெரியாது. இதனாலேயே இளங்கன்று பயமறியாது என்பர். குழந்தைகளின் இந்தத் தேடல் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்வதால் அவர்களை பாதுகாப்பான தேடலில் ஈடுபடுத்த என்னென்ன செய்யவேண்டும் என்பதை தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.
![]() |
அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்பவர்கள் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே சென்று படி இறங்காமல் பார்த்துக்கொள்ள வாசல் கதவில் மரத்தடுப்பு அமைப்பது நல்லது.
வீட்டில் மிக்ஸி, டேபிள் ஃபேன் போன்ற ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் இருந்து தூரத்தில் வைப்பது நல்லது.
குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தால் அவர்கள் பொருட்கள் பற்றிய அறிவைப் பெறுவர்.
குழந்தைகளுக்கு உலகத்தைக் காட்டுவது பெற்றோரின் கடமை. வாரத்துக்கொரு முறையாவது கடற்கரை, பூங்கா என அழைத்துச் சென்று இயற்கையைக் காண்பிக்கவேண்டும்.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் தூசு அண்டாமல் பெருக்கி, துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தப் பொருளையும் உணர அவற்றை கையில் எடுத்து வாயில் வைத்து பொருளின் தன்மையை உணர நினைப்பர். எனவே ஆபத்தான ரசாயனங்கள், பொருட்களை குழந்தை கைக்கெட்டா உயரத்தில் வையுங்கள்.
குழந்தைகள் தேடலில் அதிகமாகக் குறுக்கிடாமல் அவர்களைப் பாதுகாப்பாகத் தேட அனுமதிக்க வேண்டும். அவர்கள் எந்தப் பொருளை எடுத்தாலும் அதனை உடனே வெடுக்கெனப் பிடுங்கி வைப்பது தவறு.
![]() |
குழந்தைகள் படி ஏற ஆசைப்பட்டால் பாதுகாப்பாக படியேற அனுமதிக்கவும். படி ஏறி இறங்குதல் குழந்தைகளின் முக்கியத் தேடல்களில் ஒன்று.
சுவரில் கிறுக்குவதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறான். குழந்தைகள் கையில் பென்சில், ஸ்கெட்ச் சிக்கினால் அவர்கள் செய்யும் முதல் வேலை சுவரில் கிறுக்குவதுதான். இவ்வாறு செய்வது வீட்டை அலங்கோலமாக்கும் என நினைக்கவேண்டாம். குழந்தைகள் வளர்ந்த பின்னர் வீட்டினுள் வண்ணம் அடித்துக்கொள்ளலாம். அவர்கள் கிறுக்குவதை அனுமதிப்பது நல்லது.
குழந்தைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்காமல் சுதந்திரமாக விளையாட விடுவது அவர்களது தேடலை அதிகரிக்க உதவும். எனவே மாலை நேரத்தில் அவர்களை வாக்கிங் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருங்கள்.