/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள்: பளிச்சென மாற சூப்பரான டிப்ஸ்..!
/
துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள்: பளிச்சென மாற சூப்பரான டிப்ஸ்..!
துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள்: பளிச்சென மாற சூப்பரான டிப்ஸ்..!
துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள்: பளிச்சென மாற சூப்பரான டிப்ஸ்..!
UPDATED : செப் 09, 2023 08:30 PM
ADDED : செப் 09, 2023 08:13 PM

மண் பாண்டங்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்து தற்போது அனைவரது வீட்டிலும் எவர்சில்வர் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த வகையான பாத்திரங்கள் பயன்படுத்துவதற்கும், எடுத்து செல்வதற்கும் எளிதாக உள்ளதால், மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
ஆனால் எவ்வளவு தரமான எவர்சில்வர் பாத்திரங்கள் என்றாலும் சில கால இடைவெளிக்கு பிறகு அவை துருப்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதை அகற்ற வழி தெரியாமல் பலரும் பாத்திரங்களை ஓரங்கட்டி வைத்து விட்டு, புதிய பாத்திரங்களை வாங்கி பயன்படுத்த தொடங்குகின்றனர். இதனால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. எனவே பாத்திரத்தில் உள்ள துருவை அகற்ற பின்வரும் வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டால் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சென மின்னும்.
பேக்கிங் சோடா
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து துருப்பிடித்துள்ள இடத்தில் தடவி ஊற வைக்க வேண்டும். பிறகு டூத் பிரஷை கொண்டு நன்றாக தேய்த்து எடுத்தால் துரு மறையும். இதுவே பெரிய பாத்திரங்கள் என்றால் பேக்கிங் சோடாவை நன்றாக தூவி விட்டு சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு ஸ்க்ரப்பரை கொண்டு தேய்து, பிறகு தண்ணீர் விட்டு அலசினால் பாத்திரங்கள் புதிது போல் மின்னும்.
வினிகர்
வினிகரை துருப்பிடித்த பாத்திரங்கள் மீது ஊற்றி ஊற வைத்து பிறகு டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால், தண்ணீர் கொண்டு அலசினால் துரு நீங்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு எடுத்து பேஸ்ட்போல் கலந்து, அதை துருப்பிடித்த பாத்திரங்கள் மீது தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஸ்க்ரப்பரை கொண்டு தேய்த்து, தண்ணீர் விட்டு அலசினால் துரு நீங்கும்.