/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
'டிஷ் வாஷர்' வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!
/
'டிஷ் வாஷர்' வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!
'டிஷ் வாஷர்' வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!
'டிஷ் வாஷர்' வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!
UPDATED : ஆக 04, 2023 05:10 PM
ADDED : ஆக 04, 2023 05:08 PM

இன்று வீடுகளில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். இதனால் வீட்டு வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமாக உள்ளது. அவர்களுக்காகவே வீட்டைப் பெருக்கி, துடைக்க, பாத்திரம் கழுவ என பல வீட்டு உபயோக சாதனங்கள் வந்துவிட்டன. இந்தியாவில் ரூ.17 ஆயிரத்திலிருந்து கிடைக்கும் பாத்திரம் கழுவும் டிஷ் வாஷர் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை
![]() |
பிளேஸ் செட்டிங்ஸ் என்பது என்ன?
ஒரு பிளேஸ் செட்டிங் என்பது ஒரு பெரிய பிளேட், ஒரு சிறிய பிளேட், ஒரு கப் & சாசர், 2 டம்ப்ளர், 2 ஸ்பூன், 3 போர்க், ஒரு பவுல் ஆகியவை தான். 8 பிளேஸ் செட்டிங் என்பதில் இது போன்று 8 செட்களை வைக்கலாம். நம் இந்திய சமையலறையில் கடாய், தவளை, வாணலி, கரண்டி, தட்டு, டம்பிளர் ஆகியவை தான் இருக்கும். அதிக பாத்திரங்கள் பயன்படுத்துபவர்கள் 14 செட்டிங்ஸ் உள்ள டிஷ் வாஷர் வாங்குவது சிறந்தது.
எந்த வகை டிஷ்வாஷர் தேவை
![]() |
வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள், இரண்டு மூன்று நபர்கள் தான் உள்ளீர்கள் எனில் ப்ரீ ஸ்டான்ட் டிஷ் வாஷர் வாங்குங்கள். ஏனென்றால், வீடு மாறிச் செல்லும் போது எளிதாக எடுத்துச் செல்லலாம். இவை ஒரு அடி அகலம் உடையதாக இருக்கும். எங்கு இடம் காலியாக இருக்கிறதோ அங்கு வைத்துக்கொள்ளலாம்.
கழுவ எவ்வளவு நேரம் எடுக்கும்
டிஷ் வாஷர் பிராண்ட்களை பொறுத்து அவை கழுவ குறிப்பிட்ட நேரம் எடுக்கும். வோல்டாஸ் பெக்கோ டிஷ்வாஷரில் மினி 30 என்ற புரோகிராம் உள்ளது. அவை 30 நிமிடத்தில் கழுவி முடித்துவிடும். பாஷ் டிஷ்வாஷர் ஆட்டோ சைக்கிளில் 90 நிமிடங்கள் கழுவும். ஃபேபர் பிராண்ட் நிறுத்தி நிதானமாக 2 மணி நேரம் எடுத்து கழுவும். கையால் பாத்திரம் கழுவுவதை விட குறைந்த நீரையே இவை எடுக்கும். உங்கள் மாத ஈபி பில்லை டிஷ் வாஷர் ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரிக்கும்.