தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/24/7 மகிழ்ச்சி!

24/7 மகிழ்ச்சி!

24/7 மகிழ்ச்சி!


PUBLISHED ON : செப் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பள்ளி வளாகத்துக்குள்ளே நுழையுற ஒவ்வொரு குழந்தைக்கும் 'குட் மார்னிங்' சொல்வேன். அம்மாவை பிரிஞ்சதால அழுதுட்டே வர்ற மழலைகளுக்கு முத்தங்கள் கொடுப்பேன்; இந்த அன்புக்காகவே சில தெய்வங்கள் சிணுங்கிட்டே வரும்! ம்ஹூம்... எல்லா சந்தோஷங்களையும் இந்த கொரோனா பறிச்சிடுச்சு!'

நினைவுகளில் பெருமூச்சு விடும் 37 வயது அனிதா, புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 'கூடு மழலையர் பள்ளி'யின் தலைமை ஆசிரியை.

ஆனந்த அருவி

அனிதா: ஒரு பொடியன் இருக்குறான். தினமும் காலையில அவன் வந்ததும் நான் அவன்கிட்டே பேசணும். இல்லேன்னா, உதட்டை தொங்கப் போட்டுக்குவான்; யார்கிட்டேயும் பேச மாட்டான். அவனை கொஞ்சி அவன் முகத்துல சிரிப்பை வரவழைக்கிறது பெரும் போராட்டமா இருக்கும். ஆனா, அவன் சிரிக்கிற அந்த ஒரு கணம்... அய்யோ... அருவியில மனசு நனையுற மாதிரி ஒரு திருப்தி!

அன்பு, பொறுமை - ஆற்றல் மிக்கது எது?

காலையில வகுப்புக்கு வந்ததுல இருந்து சாயங்காலம் கிளம்புற வரைக்கும், என் முந்தானையை பிடிச்சுக்கிட்டே நடமாடுற குழந்தைகள் இருக்குறாங்க. அசதியில நான் உட்கார்ந்தா உடனே என் மடிக்கு வந்துடுவாங்க. 'இப்படிப்பட்ட செல்லங்கள்கிட்டே பொறுமையா இருக்குறேன்'னு சொன்னா அது பொய்; 'அன்பா இருக்குறேன்'னு சொல்றதுதான் உண்மை. எப்பவுமே உண்மைக்குத்தானே ஆற்றல் அதிகம்!

பார்த்துக்கிட்டே இருக்கலாம்...

1. யாருகிட்டே கேள்வி கேட்டாலும், ஒரு வாண்டே முந்திக்கிட்டு பதில் சொல்லும்; 'நீ சொல்லக்கூடாது'ன்னு கண்டிச்சா, ஒரு சிரிப்பு; 'உதைப்பேன்'னு சொன்னா அதுக்கு ஒரு சிரிப்பு!

2. 'ஏன் அழறே?'ன்னு கேட்டா, காரணத்தை மறந்துட்டு கண்ணீர் துடைக்கிற அழகு!

3. பாடம் நடத்திட்டு இருக்குறப்போ, 'எனக்கு பிடிக்கலை; நான் இதைத்தான் படிப்பேன்'னு ஏதோ ஒரு புத்தகத்தை கையில துாக்கி வைச்சுக்கிற குறும்பு; ச்சோ... ஸ்வீட்... பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

எப்போதும் ஆனந்தம்!

இந்த உலகத்துல நம்ம கண்ணீர் துடைக்க நீளுற கைகள் எல்லாம், கண்ணீருக்கான காரணத்தை தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமா இருக்கும். ஆனா, குழந்தைகளோட பிஞ்சு விரல்களுக்கு மட்டும்தான் காரணம் தேவையில்லை. அவங்க நோக்கம், அவங்களுக்கு பிடிச்சவங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும்... அவ்வளவுதான்.

'மம்மி'களுக்கு செல்லமா ஒரு 'குட்டு' வையுங்களேன் அனிதா...

'பசி தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்க்குறது தப்பு'ன்னு எந்த தருணத்துலேயாவது உணர்ந்ததுண்டா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us