தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!


PUBLISHED ON : செப் 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோயாளியை மீட்பது மட்டுமே செவிலியரின் பணி அல்ல; தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதும் செவிலியரின் பணியே. இதற்கென்று மருத்துவ துறையில் 'தொற்று தடுப்பு' எனும் தனிப்பிரிவு செயல்படுகிறது. 2014 முதல், தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் இப்பிரிவில் செவிலியாக பணியாற்றி வருகிறார் ஜெயந்தி.

பணி துவக்கம்: 1990

முதல் களம்: செயின்ட் மேரிஸ் மருத்துவமனை, தர்மபுரி.

பதவி: செவிலி

துறை அனுபவம்: 30 ஆண்டுகள்

அன்றும் இன்றும்

இது, 2001ல் நிகழ்ந்த சம்பவம். ஆதரவற்ற ஒரு மனநலம் குன்றியவர் மருத்துவமனைக்கு வந்தார். அவரோட நடவடிக்கைகள் அங்கிருந்தவங்களை தொந்தரவு பண்ணினாலும், அவரை கழிப்பறைக்கு அழைச்சுட்டுப் போறது, துணி மாற்றி விடுறதுன்னு உதவி பண்ணினாங்க. இந்த மனிதத்தால அவரோட மனநலன்ல அவ்வளவு முன்னேற்றம். இப்போ, 2020ல இருக்குறோம்; இப்படியான மனிதமுள்ள மனிதர்களை உங்களால பார்க்க முடியுதா?

என் பணி

பயன்படுத்திய ஊசி, மருந்துகள் எல்லாம் மருத்துவ கழிவுகள்; நோயாளிகளும், அவங்களை கவனிச்சுக்க வந்தவங்களும் சாப்பிட்டு மீதமாகுற உணவு, துணிமணிகள் எல்லாம் இதர கழிவுகள். இதை முறையா தரம் பிரிச்சு உரிய முறையில அப்புறப்படுத்துறது என் பணி. பார்வைக்கு குப்பைகளை நீக்குற சாதாரண வேலையா தெரியலாம். ஆனா, ஊசிகளோடவும், கிருமிகளோடவும் போராட வேண்டிய சிக்கலான வேலை. இன்னும் சொல்லப் போனா, குப்பைகளை தரம் பிரிச்சு அப்புறப்படுத்த நம்ம மக்கள் பழகாத சூழல்ல இது சவாலான வேலை!

எப்படியிருக்கு கொரோனா கால பணி அனுபவம்?

பணி முடிச்சு தினசரி நான் வீடு திரும்புறதுக்கு முன்னாடி சானிடைசர் குளியல் போட்டாகணும்; என் பக்கத்துல நின்னு தீக்குச்சி உரசினா என் மேல நெருப்பு பத்திக்கும். என் தெருவுல நான் வர்றப்போ, 'ஓடு...ஓடு'ன்னு சிலர் வீட்டுக்குள்ளே புகுந்துக்கிறாங்க. சிலர் என்கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க. இதுல எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை... பெருமைதான்; ஆமா... நான் அவங்களுக்காகவும்தானே வேலை பார்த்துட்டு இருக்குறேன்!

'செவிலி' பணிக்கு வராமல் இருந்திருந்தால்...?

நிச்சயமா ஆசிரியராகி இருப்பேன். ஆனா, இந்தளவுக்கு மன நிறைவா வாழ்ந்திருப்பேனான்னு தெரியலை. 50 வயசாயிடுச்சு; ஒருநாள் கூட 'என்னடா வாழ்க்கை இது'ன்னு வெறுப்பு வந்ததில்லை. இந்த திருப்திக்கு என் பணிதான் காரணம்.

'சுருக்'

இந்த கொடுந்துயர் நேரத்துல மக்கள்கிட்டே நான் எதிர்பார்த்து கிடைக்காதது... புன்னகை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us