தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி


PUBLISHED ON : அக் 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சின்ன குழந்தைகளை வழிநடத்துற பணிதானேன்னு சாதாரணமா நினைச்சு இங்கே வந்தேன். ஆனா, அது பெரிய தப்புன்னு அந்த சின்ன குழந்தைகள் எனக்கு உணர்த்திட்டாங்க!' -- கோவை, சரவணம்பட்டி மானசரோவர் இன்டர்நேஷனல் அகாடமியின் மழலையர் ஆசிரியை சுதா.

அந்த தப்பு

வேலை பரபரப்புல ஏதாவது ஒரு குழந்தை சொல்றதை கவனிக்காம விட்டிருப்பேன். இதை மனசுல வைச்சுட்டு, அந்த குழந்தை முன்ன மாதிரி என்கிட்டே ஸ்நாக்ஸ் பகிர்ந்துக்காது; என் காதுல வந்து ரகசியம் சொல்லாது... இப்படி என் பணியில நிறைய சுவாரஸ்ய அனுபவங்கள்!

ஒரு ஆசிரியையா கண்ணுக்கு தெரியாத இந்த இடைவெளியை சீக்கிரமா உணர்ந்து அந்த தவறை சரி பண்றேன். ஏன்னா, குழந்தைங்க மனசுல இடம் பிடிக்கிறதைவிட, பிடிச்ச இடத்தை தக்க வைச்சுக்கிறது ரொம்பவே முக்கியம்.

சுதா மிஸ்/- குழந்தைகள் - இந்த ஊரடங்கு யாருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு?

* ஒரு குழந்தைக்கு தினமும் என் கூட வீடியோ கால்ல பேசியே ஆகணும்.

* இன்னொரு குழந்தைக்கு, என் ஞாபகம் வரும்போதெல்லாம் பூட்டி இருக்குற பள்ளியோட வாசலை காட்டி அம்மா சமாதானம் செய்யணும்.

* வீட்டுக்கு சாப்பிட வரச்சொல்லி சில குழந்தைகள் போன் பண்ணிட்டே இருக்குறாங்க!

இந்தவகையில, குழந்தைங்கதான் என்னை ரொம்ப மிஸ் பண்றாங்க!

குழந்தை எனும் அதிசயம்

ஒருநாள் யதார்த்தமா ஒரு குழந்தையை பாராட்டி கையில குட்டியா நட்சத்திரம் வரைஞ்சு விட்டேன். அதைப் பார்த்த எல்லா குழந்தைகளும் கையில நட்சத்திரம் வரைய ஆசைப்பட்டு நான் சொல்றதை கேட்க ஆரம்பிச்சாங்க; அவங்க உலகத்துல இதுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கு. நம்ம அறிவாற்றலால புரிஞ்சுக்க முடியாத அதிசயம் குழந்தைகள்.

சாதாரண பேனா மையில வரையுற நட்சத்திரங்கள் மூலமா அந்த அதிசயங்களுக்குள்ளே நான் வாழ்றேன். இது எத்தனை பெற்றோர்களுக்கு சாத்தியம்னு தெரியலை.

நான் ஏகலைவி!

இந்த குழந்தைகளுக்கு மத்தியில நாலு வருஷமா இருக்குறேன். இந்த பணி அனுபவத்தால, எனக்குள்ளே எதிர்மறை எண்ணங்கள் எழும்புறதே இல்லை; சலிப்பு இல்லாத சுறுசுறுப்பான மனசு கிடைச்சிருக்கு;

இந்த வரங்களுக்கு குழந்தைகள்தான் காரணம். இந்தவகையில அவங்க துரோணச்சாரியார்... நான் ஏகலைவி.

'மம்மி'களுக்கு செல்லமா ஒரு குட்டு வையுங்களேன் சுதா...

வசதி இருக்குதுன்னு குழந்தைகளுக்கு சவுகரியத்தை மட்டுமே பழக்கப்படுத்துறது நல்லதுன்னு நினைக்கிறீங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us