தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி


PUBLISHED ON : டிச 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஏதாவதொரு பொழுதில், 'நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம்' எனும் எண்ணம் நம்மில் அத்தனைபேருக்கும் எழும்பும். பிரசன்னா ஜெனிட் மட்டும் இதில் இருந்து சற்றே விலகி நிற்கிறார்.

'எனக்கு குழந்தையா இருக்கிறதுல விருப்பம் இல்லை. என் ஆயுசு முழுக்க இப்படியே குழந்தைகளோடவே இருந்திடணும்; அது போதும்!' என்கிறார்.

ஏன் இப்படி ஜெனிட்?

இந்த ஊரடங்குல என் பள்ளியில படிக்கிற ஒரு பொடியனோட அம்மா, 'என் பையன் மனசுல ஏதோ ஏக்கம் இருக்கு; உங்களைப் பார்க்க கூட்டிட்டு வரட்டுமா'ன்னு கேட்டாங்க. 'சரி'ன்னு சொன்னேன்.

என்னைப் பார்த்ததும் அவனுக்கு செம குஷி. 'ஜெனி... நீ இங்கேதான் இருக்கியா?'ன்னு கொண்டாடி தீர்த்துட்டான். அன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் என் கூடவேதான் இருந்துட்டுப் போனான்.

இந்த சந்தோஷம்... நான் குழந்தையா இருந்தா கிடைக்குமா என்ன!

கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் 'ஜாய் இன்டர்நேஷனல் ட்விங்கிள் குட்டிஸ் ப்ளே ஸ்கூல் அண்டு டே கேர்' பள்ளியை, கடந்த நான்கு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார், 37 வயதான பிரசன்னா ஜெனிட்.

அழகென்றால்...

* 'ப்ளூ கலர் நாய் என் முதுகுல கடிச்சிடுச்சு'ங்கிற பொய்!

* 'ஜெனி... வெளியே போனா கொரோனா வரும்னு அப்பா சொன்னாங்க; நீயும் வெளியே போகாதே'ன்னு வாய்ஸ் மெசேஜ் அனுப்புற அக்கறை குறும்பு!

* நாடக மேடையில, 'புரோகிராம்'னு சொல்றதுக்கு பதிலா 'கோபி ரூம்'னு சொல்லிட்டு உதடு கடிக்கிற அந்த சிரிப்பு!

குழந்தைகளின் இப்படியான பேரழகு தருணங்கள், என் வாழ்நாள் பொக்கிஷங்கள்!

இன்றைய குழந்தைகள் எல்லாரும் சந்தோஷமா இருக்குறாங்களா?

'பணமும் அதுமூலமா கிடைக்கிற பொருட்களும்தான் சந்தோஷம்'னு நினைக்கிற குழந்தைகளும் இருக்குறாங்க; ஆனா, இதுக்கு காரணம் அவங்க இல்லை; அவங்க பெற்றோர்! 'பகிர்ந்து கொள்' - இதுதான் என் கல்வியோட அடிப்படை; அது, அறிவானாலும் சரி; உணவானாலும் சரி! பகிரும் பழக்கம் பாசத்தையும் கொடுக்கும்; பண்பையும் வளர்க்கும்! என் குழந்தைகள் சந்தோஷமா இருக்குறாங்க!

ஊரடங்கில் உள்ளம் வருடிய நினைவு?

என் ஆபிஸ் ரூம் சேர்ல எப்பவும் ஏதாவதொரு குழந்தை வந்து உட்கார்ந்துக்கும். அதுல ஒரு பொண்ணு, நான் என்னவெல்லாம் செய்றேனோ அதையெல்லாம் அப்படியே செய்வா; 'குட்டிம்மா இன்னைக்கு என்ன சாப்பிட்டாங்க?'ன்னு கேப்பா! இந்த தனிமை நாட்கள்ல, அடிக்கடி அவளை நினைச்சு சிரிச்சுக்கிறேன்.

'அம்மா'க்களுக்கு செல்லமா ஒரு குட்டு !

'உங்க மூலமா குழந்தைகள் உலகத்தை பார்க்கணும்... அதுக்கு நீங்க ஜன்னலா இருக்கணும்; இருக்குறீங்களா?'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us