தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/இப்படித்தான் வாழ்கிறோம்!

இப்படித்தான் வாழ்கிறோம்!

இப்படித்தான் வாழ்கிறோம்!


PUBLISHED ON : டிச 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம்... நான் பிஸ்டிஸ் பிரிஸ்கா. கோவை, மேட்டுப்பாளையம் வட்டத்துல இருக்குற நஞ்சப்பா நகர் என் வசிப்பிடம். இந்தாண்டு நடந்த 'நீட்' நுழைவுத்தேர்வுல முதல் முயற்சியிலேயே ஜெயிச்சேன். எந்த பயிற்சி மையத்துக்கும் நான் போகலை ; வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தந்த படிப்பறிவே போதுமானதா இருந்தது.

பிரிஸ்காவுக்கு அறிமுகமான ஊர்கள்?

எங்க பூர்வீகமான சிதம்பரத்தை தவிர எந்த ஊருக்கும் போனது கிடையாது!

உங்களுக்கே அதீதமா தெரியுற உங்க விருப்பம்?

வீட்ல எனக்குன்னு ஒரு படிப்பறை வேணும்ங்கிற ஆசை!

இஸ்ரோ, நாசா பற்றி...?

விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கணும்னு ஆசை இருந்தது; குடும்ப சூழல் காரணமா அதை எப்பவோ கரைச்சிட்டேன்!

ஒரே நாளில் பார்த்த அதிகபட்ச சினிமாக்கள்?

நான் சினிமா பார்த்தது இல்லை! நம்புங்க; சினிமா பற்றி தோழிகளுக்குள்ளே பேச்சு வர்றப்போ என்னை ஆச்சரியமா பார்ப்பாங்க. ஏன்னா எனக்கு விஜய், அஜித் தவிர்த்து வேறு நடிகர்களோட முகம் தெரியாது; இதனால, என்னை ரசனை இல்லாதவளா சிலர் நினைப்பாங்க! 'சினிமா மட்டுமே ரசனை இல்லை; நானும் கொண்டாட்டமாத்தான் இருக்குறேன்'னு அவங்களுக்கு புரிய வைக்க நான் முயற்சி பண்ணலை!

வீடே உலகம்

அப்பா பிரபாகரனுக்கும் அம்மா குயிலிக்கும் தையல் தொழில்லதான் வருமானம். தீபாவளி, முகூர்த்த சமயங்கள்ல ஆர்டர் அதிகமா இருக்கும். அம்மா துணியை வெட்டி கொடுப்பாங்க; நான் தைப்பேன். வீட்டைவிட்டா ஸ்கூல், ஸ்கூல் முடிஞ்சா வீடுன்னு வாழ்ந்துட்டேன்.

பெரம்பலுார் தனியார் மருத்துவ கல்லுாரியில எனக்கு இப்போ சீட் கிடைச்சிருக்கு.

பிளான் பி

'நீட்' தேர்வுக்கு பயந்து சில மாணவர்கள் தவறான முடிவு எடுத்தது என்னை மனசளவுல ரொம்பவே பாதிச்சது. எல்லாருக்கும் ஒரு பெரிய கனவு இருக்கும்; அதுக்காக, 'பிளான் பி' இல்லாம யாரும் இருக்கக் கூடாது. ஒருவேளை இந்த மருத்துவ கனவு எனக்கு கைகூடாம போயிருந்தா, வேளாண்மை சார்ந்த படிப்புக்கு நான் தயாரா இருந்தேன்!

விட்டதும் பெற்றதும்

ஓட்டப் பந்தயம், த்ரோபால் மற்றும் சதுரங்கத்துல எனக்கு ஈடுபாடு அதிகம். ஆனா, வீட்ல எனக்கடுத்து தம்பி, தங்கச்சி இருந்ததால படிப்பை மட்டுமே கெட்டியா பிடிச்சுக்க வேண்டிய சூழல்!

புது உலகத்துல நுழையப் போறதை நினைச்சு பதற்றமா இருக்குதா?

இருக்கு; ஆனா, இதையும் நிச்சயம் கடப்பேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us